மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » மகளிர் விருப்பம் » பருத்தி ஆடைகளை விரும்பும் பெண்கள் (Cotton Dresses | Womens Desire)
Feedback Print Bookmark and Share
 
பொதுவாக ‌‌தீபாவ‌ளி ப‌ண்டிகை‌க்காக ‌விலையுய‌ர்‌ந்த ஆடைகளை வா‌ங்‌கி அ‌ணியு‌ம் பெ‌ண்க‌ள், இ‌ந்த ‌ஆ‌ண்டு ‌விலை குறை‌ந்த பரு‌த்‌தி ஆடைகளையே அ‌திக‌ம் ‌விரு‌ம்‌பி வா‌ங்‌கின‌ர். இ‌ந்த‌ ‌விஷய‌ம், ப‌ட்டு‌ப் புடவை‌ ‌வி‌‌ற்பனை‌ குறை‌ந்தது‌ம், பரு‌த்‌தி து‌ணிக‌ளி‌ன் ‌வி‌ற்பனை சூடு ‌பிடி‌த்ததையு‌ம் வை‌த்து கூற‌ப்படு‌கிறது.

தமிழக மக்கள் ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது ஆகும். பட்டு ஆடைகள், இனிப்பு வகைகள், பல்வேறு ரக பட்டாசுகள் ஆகியவை தீபாவளி பண்டிகையில் கண்டிப்பாக இடம்பெறும். ஒரு மாதத்திற்கு முன்னரே ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.

அதுபோல இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால், இல்லத்தரசிகளும், இளம் பெண்களும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், பட்டு சுடிதார்களை வாங்குவதற்குப் பதிலாக சற்று விலை குறைந்த காட்டன் சேலைகள், காட்டன் சுடிதார்களை அதிகம் வாங்கினார்கள்.

பட்டுப் புடவைகளை விசேஷ நாட்களில் மட்டும்தான் கட்ட முடியும். அதுவு‌ம் இ‌ப்போது கைவேலை‌ப்பாடு கொ‌ண்ட ஆடைகளையே பெ‌ண்க‌ள் ‌திருமண‌ம் போ‌ன்ற ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்கு‌ம் அ‌ணி‌ந்து வருவதா‌ல் ப‌ட்டி‌ன் பய‌ன்பாடு குறை‌ந்து வரு‌கிறது. நெரு‌ங்‌கிய உற‌வின‌ர்களது ‌திருமண‌ங்களு‌க்கு ம‌ட்டுமே ப‌ட்டு எ‌ன்றா‌கி‌வி‌ட்டது. ப‌ட்டை‌ப் பா‌ர்‌த்தா‌ல் ப‌ட்டி‌க்கா‌ட்டை பா‌ர்‌த்தது போ‌ல் பா‌ர்‌க்கு‌ம் கால‌ம் ஆ‌கி‌வி‌ட்டது.

மேலு‌ம், பருத்தி ஆடைகளை எந்த நாளிலு‌ம் சாதாரணமாக அணியலாம். சென்னையில் 12 மாதங்களில் 10 மாதம் வெயில் கொளுத்துகிறது. சென்னைக்கு பருத்தி ஆடைகள்தான் சிறந்தது. காட்டன் சேலைகளை, சுடிதார்களை விரும்பி அணிவதற்கு இவைதான் காரணம் என்‌கி‌ன்றன‌ர் பெண்கள்.

வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருக்கும் பெண்களும் பருத்தி ஆடைகளையே விரும்பு அணிகின்றனர். ஒரேயொரு பட்டு சுடிதார் வாங்கும் செலவில் 4 காட்டன் சுடிதார் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

ப‌ல்வேறு ‌நிற‌ங்க‌ளி‌ல் நம‌க்கே‌ற்ற வகை‌யி‌ல் தை‌த்து உடு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் ஆடை சுடிதா‌ர் எ‌ன்பதால‌் பருத‌்‌தி சுடிதா‌ர்க‌ள் அ‌திகமாக ‌வி‌ற்பனையா‌கியு‌ள்ளன எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்