விடுதலைக்கு மகளிரெல் லோரும் வேட்கை கொண்டனம்; வெல்லும் என்றே திடம னத்தின் மதுக்கிண்ண மீது சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோரும் உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும் ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்; இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர், இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்; குறைவிலாது முழுநிகர் நம்மைக் கொள்வ ராண்க ளெனிலவ ரோடும் சிறுமை தீரநந் தாய்த் திரு நாட்டைத் திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்; அறவி ழுந்தது பண்டை வழக்கம்; ஆணுக்குப் பெண் விலங்கெனம் அஃதே. விடியும் நல்லொளி காணுதி நின்றே, மேவி நாக ரிகம்புதி தொன்றே; கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு, தாம்முதல் என்றன ரன்றே? அடியோ டந்த வழக்கத்தைக் கொன்றே, அறிவு யாவும் பயிற்சியில் வென்றே கடமை செய் வீர், நந் தேசத்து வீரக் காரி கைக்கணத் தீர், துணி வுற்றே.
|