பார்ப்பதற்கு தஞ்சாவூர் ஒவியங்களைப் போல் இருந்தாலும், அவற்றைவிடக் குறைந்த செலவில் விரைவாகச் செய்து முடிக்கும் வகையில் உள்ளன இந்த ரிவர்ஸ் கிளாஸ் பெயிண்டிங் ஒவியங்கள்.
செவ்வக வடிவமான கனமான கண்ணாடி ஷீட்களில் கிருஷ்ணர், பிள்ளையார், கஜலஷ்மி, வெங்கடாசலபதி போன்ற கடவுளரின் ஒவியங்கள் தயாரான நிலையில் பேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கின்றன. கூடவே அதே ஒவியத்தின் பிரிண்ட் ஒன்றும் கொடுக்கிறார்கள். என்னென்ன நிறத்தை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும் என்பதை அதைப் பார்த்துத் தீர்மானித்துக் கொள்ளலாம். தஞ்சாவூர் ஒவியங்களைப் போலவே பொறுமையும், நிதானமும் இதற்குத் தேவை. அடிப்படை ஒவியத்தைக் கையால் வரைவதில்லை என்பது ஒன்றுதான் வேறுபாடு. கண்ணாடிப் பலகையுடன் கூடவே ஒவியத்திற்கான பலவகை வண்ணப் பெயிண்ட்டுகளும் செட்டாகக் கிடைக்கின்றன. சுமார் 12"X18" ஒவியம் வரைந்து பிரேம் செய்ய ரூ.1000 செலவாகும்.
தேவையான பொருட்கள்
1. தஞ்சாவூர் ரிவர்ஸ் கிளாஸ் பெயிண்டிங் செய்ய நாம் தேர்ந்தெடுக்கும் ஒவியம். 2. பிரஷ்கள்-0, 1, 2 எண்கள் உள்ளவை. 3. நிறங்கள்-மெட்டாலிக் பெயிண்ட்கள் மற்றும் கண்ணாடி ஒவியங்களுக்கான ஊயஅடெin ழுடயளள- பெயிண்ட்டுகள். 4. பேப்ரிக் கிளிட்டர் ஒரு வகை பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்ட பசை போன்ற திரவம். 5. தங்க நிற, வெள்ளி நிறப் பொடிகளுடன், கலக்கும் கூhinநேச திரவம். 6. எனாமல் பெயிண்ட்-ஒவியத்தின் சுற்றியுள்ள பகுதிகளை நிரப்ப. 7. வெள்ளி, தங்க நிற மெட்டாலிக் பெயிண்ட்கள்-ஒவியத்தின் உடைகளுக்கு வண்ணம் தர. 8. கற்களுக்கு வண்ணம் தர ஸ்டோன் பெயிண்ட்.
செய்முறை விளக்கம்
1. ஒவியத்தை எடுத்து வந்து பின்புறமாகப் பெயிண்ட் செய்ய வேண்டும். முன்புறம் அழுக்கு எதுவுமில்லாமல் ஒரு காய்ந்த துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும். வண்ணங்களைப் பின்புறத்தில் தான் கொடுக்கப் போகிறோம்.
2. முதலில் கற்கள் பதித்துள்ளது போல் தெரியும் இடங்களில் முதலில் கிளாஸ் பெயிண்ட்டுகளால் நிரப்ப வேண்டும். பொதுவாகப் பச்சை, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கற்களுக்குத் தேவை. உடன் கொடுக்கப்பட்டிருக்கும் பிரிண்ட்டைப் பார்த்து நிறங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
3. கிளிட்டர் என்று வாங்கியுள்ளன பசை போலுள்ள திரவத்தை பிரஷ் மூலம் இதன்மீது நிதானமாகத் தீட்ட வேண்டும்.
4. தங்கம் அல்லது வெள்ளிநிறப் பொடியைத் தின்னர் எனப்படும் திரவத்துடன் கலந்து மெல்லிய பிரஷ்ஷால் கற்கள் பதித்துள்ளது போல் காணப்படும் நகைகள் மற்றும் புடவை பார்டர்கள் போன்ற இடங்களில் தீட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் கற்கள் போல அவை எடுப்பாகத் தெரியும். கற்கள் மீது முன்னதாகக் கொடுத்த கலவை நன்றாகக் காய்ந்த பின்புதான் பொடிக் கலவையைத் தீட்ட வேண்டும்.
5. புடவைக்கு வெள்ளி அல்லது தங்கநிற மெட்டாலிக் பெயிண்ட் மூலம் வண்ணம் தரலாம்.
6. எனாமல் பெயிண்ட் வகைகளை ஒவியத்தின் சுற்றுப்புறப் பகுதி மற்றும் பெண் கடவுளர்களின் ஒவியங்களாக இருந்தால் ரவிக்கை போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம்.
7. பேப்ரிக் கலர் வண்ணங்களை துணிகளில் வண்ணம் தீட்டப் பயன்படுத்துகிறோம் அல்லவா? இவ்வகை வண்ணங்களை ஒவியத்தின் உடல் பகுதிக்குத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக கிருஷ்ணன் என்றால் உடலுக்கு நீல வண்ணமும், மற்ற கடவுளரின் உடலுக்குத் தோல் வண்ணம் கொண்டும் தீட்டலாம். இப்படி உடல் பகுதிக்கு நிறங்களைத் தீட்டும் போது மிகுந்த கவனம் தேவை. உதாரணமாக கால்விரல், கைவிரல் நகங்களில் நிறம் தீட்டிக் காய்ந்த பின்பு தான் பிற இடங்களில் வண்ணம் தர வேண்டும். கண் விழிகளென்றால் கருவிழியைத் தீட்டி விட்டு வெள்ளைப் பகுதியைக் கவனமாக அவ்வப்போது, தின்னர் தடவி எடுத்து விட வேண்டும்.
முழு ஒவியமும் வண்ணம் தீட்டி நன்கு காய்ந்த பின்பு பிரேம் செய்யக் கொடுக்கலாம். மேற்சொன்ன அளவுள்ள ஒவியத்திற்கு பிரேம் செய்ய ரூ150 முதல் ரூ.300 வரை ஆகும். சிறிது முயற்சியுடனும், பொறுமையுடனும் செய்தால் தஞ்சாவூர் ஒவியங்களைப் போலவே காட்சி தரும் தஞ்சாவூர் ரிவர்ஸ் கிளாஸ் பெயிண்டிங் தயார்.
சென்னையில் இவை கிடைக்கும் சில இடங்கள்: மைலாப்பூர்: வஹாப் ஸ்டோர்ஸ்(ராயப்பேட்டை ஹைரோடு) தி.நகர்: ராஜா ஸ்டோர்ஸ்(சத்யா காம்ப்ளெக்ஸ் உஸ்மான் ரோடு)
|