முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > மகளிர் விருப்பம்
 
84 வயது மூதாட்டி வானிலிருந்து குதித்து சாகசம்!
Webdunia
லண்டனைச் சேர்ந்த 84 வயதான மூதாட்டி ஒருவர் வானில் 10,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.

வயதானவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனம் பிரேண்டன்கேர்.

இந்நிறுவனத்திற்காக 3,000 பவுண்டுகள் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் வியப்பளிக்கிறது.

நிதிக்காக லண்டனைச் சேர்ந்த 84 வயதான மூதாட்டி டோரீன் அவ்ரி விமானத்தில் இருந்து குதித்துச் சாகசம் நிகழ்த்த தீர்மானித்தார்.

இதன்படி, நேத்ரவான் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ விமானம் மூல் 10,000 அடி உயரத்திற்கு டோரீன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து ஆகாய சாகச வீரர் உருவரின் துணையுடன் கீழே குதித்தார். மணிக்கு 120 மீட்டர் வேகத்தில் நிலத்தை அடைந்த டோரீனை கூடியிருந்தவர்கள் வியப்புடன் வரவேற்றனர்.

தனது சாகசம் பற்றித் தெரிவித்த மூதாட்டி டோரீன்,'மிகவும் அருமையாக இருந்தது'' என்றார்.

''இது வியப்பளிக்கும் அனுபவமாக இருந்தது, நான் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்தேன். என்னைப் போல வயதானவர்களுக்காக நிதி திரட்ட இது அவசியம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்
‌திருமண ‌நி‌தி உத‌வி‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் : தமிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!
மிஸ். யூனிவர்ஸ் அள்ளிச் செல்லும் பரிசுகள்
என்றும் உங்களுடன் - 5 மேக்கப் சாதனங்கள்
முகம் பொலிவு பெற குறிப்புகள்
கறுகறு கூந்தல் வேண்டுமா?
மாசற்ற சருமம்- அம்மைத் தழும்புகள் மறைய