பலர் தங்கள் கைப்பையில் அளவுக்கு அதிகமான மேக்கப் சாதனங்களை வைத்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. இதனால் தேவையில்லாத பளுவை சுமப்பதுடன், தேவையான பொருளை எடுப்பதற்கு படும்பாடு அப்பப்பா!!
எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ :-
`வெட் கிளென்சிங் டிஸ்ஸு' :- முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான `வெட் கிளென்சிங் டிஸ்ஸு' போல் வேறு எதுவும் இல்லை!!
ஃபவுன்டேஷன் :- முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தைத் தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் ஸன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைக்கும் அத்துடன் வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.
மஸ்காரா :- மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரிக்கக் கூடியது. கண்களை பெரிதாக தோன்றவைக்கும் தன்மை இதற்கு உண்டு.
லிப்ஸ்டிக் :- இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுக்கும். தேவைப்பட்டால் இதை ப்ளஷராகவும் உபயோகிக்கலாம். உதடுகளுக்கும் கண்ணங்களுக்கும் நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.
காம்பேக்ட் :- மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.
எப்பொழுதும் அழகாக தோற்றமளிக்க இனி ஒரு மூட்டையை சுமக்க வேண்டாம்!
|