|
|
|
குழந்தை பருவத்திலிருந்தே சரியான எடை
|
|
|
|
|
|
Webdunia
|
|
|
|
|
|
|
|
|
|
நல்ல உணவு, விஞ்ஞான ரீதியான அழகு, ஆன்மீகம் இந்த மூன்றும் கொண்டவர்கள் என்ற முறையில் இந்தியர்கள் கர்வப்பட வேண்டும்.
நாம் நல்ல ருசியான உணவை உட்கொள்ள ஆசைப்படுவதால் தேவையில்லாத எடை நம் உடலில் அதிகரிக்கிறது. உடல் சத்திற்கு தேவையானதை உண்ண வேண்டியதை நாக்கின் ருசியை மையப்படுத்தி உண்ணுதால், உடலில் சதை போடத் துவங்குகிறது.
குழந்தைகளுக்கு எடைபோடுவது என்பது, சாதாரண எடையை விட அவர்கள் 20 சதவிகிதம் அதிக எடை உள்ளவர்களாக இருப்பதாகும். இது மருத்துவப் பிரச்னை என்பதை விட இது ஒரு சமூகப் பிரச்னை என்று கூறுவதே பொருத்தம்.
நம் சமூகம், குண்டான குழந்தைகளை அதிகம் விரும்புகிறது. இந்தக் குழந்தைகளையே `க்யூட்' என்று செல்லமாக அழைக்கிறோம். சுருக்கமாக குண்டுக் குழந்தைகளையே நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
தற்போது 100 மில்லியன் இந்தியர்கள் சதைப்போட்டு குண்டாக இருக்கிறார்கள் என புள்ளியியல் விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இதில் அபாயரகமானது என்னவென்றால் டீனேஜில் அதிகமாக உடல் எடை உள்ளவர்களின் எண்ணிக்கை பெருத்துவருவகிறது.
நகர்ப்புற பள்ளிகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், டீனேஜர்களின் உடல் எடைபெருக்கம் அதிகமாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக 11 வயது முதல் 16 வயது நிரம்பியவர்களின் உடல் எடை அதிகமாகி வருவதாக மருத்துவ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
டீனேஜ் உடற்பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள்
பெற்றோர்கள் : 80 சதவீத குழந்தைகள், அவர்களின் தாய் தந்தையரின் உடல் பருமனாக இருந்திருந்தால், இவர்களின் உடல் பருமனும் அதிகமாக இருக்கிறது.
உணவு பழக்கங்கள் : வீட்டிலுள்ள பெரியவர்களின் தவறான உணவு உட்கொள்ளும் வழிமுறை அப்படியே குழந்தைகளையும் தொற்றிக் கொள்வதால் குழந்தைகள் உடல் பருமன் அதிகரிக்கிறது.
விளம்பரங்கள் : தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றவற்றில் வரும் `சாக்லெட்' விளம்பரங்கள்.
குடும்ப சூழ்நிலை : தனிமையில் விடப்பட்ட பாதுகாப்பாற்ற குழந்தைகள், அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் தேவையற்ற உடல் பருமன் ஏற்படுகிறது.
மருத்துவப் பிரச்னைகள் : சர்க்கரை வியாதி, தைராய்டு சுரப்பிகளின் செயலிழப்பு, ஸ்டீராய்ட் போன்ற உடல் பருமன் ஏற்படுத்தும் மருந்துகளை சாப்பிடுதல்.
தேகப் பயிற்சியில் சிறிது கூட ஈடுபடாமல், எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதும், அல்லது கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டிருப்பதும் சிறு வயது உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
டீனேஜ் பருவத்தில்தான் உடலில் பல மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்படும். எனவே அப்போதுதான் அதிக கவனமும் தேவை. உடல் பருமன் என்பது வாழ்க்கை முழுதும் உடல் ரீதியாகவும், மனதளவிலும் பல பிரச்னைகளைக் கொடுக்கக் கூடிய விஷயமாகும்.
பருமனான டீனேஜர்களிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். தங்கள் உருவம் குறித்து கவலை கொண்டு தனிமைப்பட்டுப் போவார்கள். இவர்கள் அதிக கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
உடல் ரீதியாக கவர்ச்சியாக இல்லாதவர்கள், எதிர் பாலினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டதைப் போல உணர்வார்கள். இது மனோரீதியான துன்பத்தை ஏற்படுத்தும். தன்னைப் பற்றியே தாழ்வாக நினைத்துக் கொள்ளும் இவர்களின் உடற்பருமன் இதனால் இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உடற் பருமனால், இருதய நோய்களும், எலும்பு தொடர்பான நோய்களும், எலும்பு, மூட்டு ஆகியவை தேய்ந்து போவதும், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்றவைகள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், கர்ப்பமாவதில் பிரச்னைகளும், குழந்தை பிறப்பில் பிரச்னைகளும் உடல் பருமனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
மேற்சொன்ன நோய்களுக்கான அறிகுறிகள், இளவயது உடற்பருமனால், டீனேஜ் பருவத்திலேயே தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன.
கொழுப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் ஏற்படுதல் போன்ற சர்க்கரை வியாதிக்கு முந்தைய நோய்க் கூறுகள் டீனேஜர்களுக்கு தற்போது அதிகரித்து வருகிறது.
சிலசமயம் பருமனைக் குறைக்க சில தவறான முறையை கையாள்வதும் அபாயகரமான போக்காகும். இதனால் சிலர் அதீத உணவுக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது, புரதச் சத்துக்களையும், கலோரிகளையும் குறைத்து, வளர்ச்சியை தடைப்படுத்துவதில் போய் முடியும்.
வேறு சிலர் மேலும் அபாயகரமாக, உணவு உட்கொள்ளாமலும், பசி எடுக்காமல் இருக்க மாத்திரைகளையும், சாப்பிட்ட பிறகு வாந்தி எடுக்க சில முறைகளையும் கையாளுகின்றனர். இது உடலுக்குத் தேவையான கலோரிச் சத்துக்களைக் கூட அனுமதிக்காமல், ஒட்டு மொத்த உடல் வளர்ச்சியையே தடை செய்வதில் போய் முடியும்.
இது போன்ற முறையற்ற செயல்களால் பெண்களுக்கு மாதவிடாய் நின்று போவதும், ஆண்களின் தசை வளர்ச்சி குறைவதும் ஏற்படும்.
உடல் எடை குறைக்கும் மாத்திரைகளும், உடனடியான ரசாயன மருந்துகளும் ஓரளவிற்கு பருமனைக் குறைத்தாலும், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அபாயகரமானவை. இந்த முறைகள் விஞ்ஞான பூர்வமானது அல்ல.
பருமனைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
. உங்கள் குழந்தைகளுக்கு 3 அல்லது 4 முறை சரியான அளவு உணவு கொடுங்கள். குளிர்பானங்கள் அருந்துவதை தடை செய்யுங்கள். அதற்குப் பதிலாக பழச்சாறுகள், தண்ணீர், கொஞ்சம் பால் என அவர்கள் மனதை மாற்றுங்கள்.
. அளவைக் குறைத்து உணவின் தரத்தில் கவனம் செலுத்துங்கள்.
. உட்கார்ந்து கொண்டே இருப்பதை தவிருங்கள். தேகப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள்.
. கலோரியை அதிகரிக்கும் உணவை தவிர்த்து விடுங்கள்.
. உடல் பருமனான டீனேஜர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி. சிகரெட் பிடிப்பது, பசி எடுப்பதை தடை செய்யும், இதனால் உடல் இளைத்துப் போகும் என்பது தவறான நம்பிக்கையாகும். மேலும், புகை பிடிப்பது, கொழுப்பு சத்து உள்ள பகுதியை மோசமாக பாதித்து, இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகமாகப் போய் தேங்கும் அபாயம் உள்ளது. `புகைப் பிடிப்பதை நிறுத்துங்கள்!'
. மதுப்பழக்கத்தை உடனே கைவிடுங்கள். மது கலோரி அளவை அதிகரிக்கச் செய்யும்.
. அணுகு முறையை மாற்றுங்கள்.
. உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பதை தவிருங்கள்.
சுருக்கமாக குழந்தைப் பருவ உடற்பருமன், டினேஜிலிருந்து மற்றும் பெரியவர்களான பின்பும், பல பிரச்னைகளை, ஏற்படுத்தக் கூடியது. ஆகவே சிறு வயதிலேயே கவனமான முறைகளை கையாண்டு பருமனைக் குறைக்க தகுந்த ஆலோசனை பெறுங்கள்.
|
|
|
|
|
|
|
|
|
|
|