முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  மகளிர் விருப்பம்
 
நீரில் உடற்பயிற்சிகள்
Webdunia
வயதிற்கும், அத்லெடிக் திறமைக்கும் அப்பாற்பட்டது தண்ணீரில் செய்யும் உடற்பயிற்சிகள். ஆரோக்கியத்தை மற்றும் அழகை பராமரிக்க இன்றும் பல வயதினருக்கு சிறந்தது நீர் உடற்பயிற்சிகளே.

உடற் கலோரிகளை எரிக்கவும், சக்தியை அதிகரிக்கவும், தசைகளை நன்றாக பராமரிக்கவும், இருதய பாகங்கள் சிறப்பாகச் செயல்படவும், நீர் உடற்பயிற்சி போன்று சிறந்தது எதுவும் இல்லை என்றே கூறலாம்.

உடற்பயிற்சிக் கலையில் நீச்சலும், பிற நீர் உடற்பயிற்சிகளும் மிகச் சிறந்தவையாக மருத்துவர்களால் கருதப்படுகின்றன. நீர் உடற்பயிற்சியில் நம் அனைத்து உடற்பாகங்களும் இயங்குகின்றன. உடல் இயக்கம் அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளில் வயதானவர்கள் பங்கு பெற நீச்சல் பெரிதும் உதவுகிறது. உதாரணமாக, ஓட்டம் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள்.

காயத்திற்கு பிறகான உடற்சிகிச்சையின் போது நீர்ப்பயிற்சி மிகவும் பயனுள்ளது, ஏனெனில் மூட்டுகள் மற்றும் தசைக்கோடியிலிருக்கும் வன்மையான இழைகளிலிருந்து கனத்தை தண்ணீர் எடுத்து விடுகிறது.

தண்ணீரின் மகத்துவம் என்ன?

ஒரே நேரத்தில் தசை, இருதயம், நுரையீரல் என அனைத்துப் பகுதிகளும் இயங்குகின்றன.

நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி புரிகின்றன. இதனால் நாம் தினசரி வேலைகளை செய்யும்போது கூட உடல் உஷ்ணமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக நம் நாடு போன்ற உஷ்ணப் பிரதேசங்களில் நீர் உடற்பயிற்சி இன்றியமையாதது.

நீர் உடற்பயிற்சியில் எல்லா பகுதிகளும், அதிக சிரமமின்றி இயங்குவதால், எல்லோருக்கும், எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாக இது அமைகிறது. அதிக நேரம் நீர் உடற்பயிற்சி செய்தால் உடலில் வலி ஏற்படும் என்ற பயமே உங்களுக்குத் தேவையில்லை.

மூட்டுகளில் அதிக அழுத்தம் கொடுக்கவேண்டிய தேவையில்லாததால், நீர் உடற்பயிற்சியில் நம் முதுகு, முழங்கால்கள், பாதங்கள் ஆகியவை அதிக பயனடைகின்றன.

நீரில் மிதந்து கொண்டிருப்பது போன்ற பயிற்சியினால் அதிக எடை உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைக்கலாம். குறிப்பாக கால் வலி அல்லது முதுகு வலியால் அவதியுறுபவர்களுக்கு மிதக்கும் பயிற்சி மிகவும் பயனுள்ள பயிற்சியாகும்.

வாட்டர் ஏரோபிக்ஸ் : 20 நிமிடம் நீரின் ஆழத்திலோ, மேல் பரப்பிலோ நீச்சலடித்தால் இருதய தொடர்பான நலன்களைப் பெறலாம்.

தசை நெகிழ்வு / பலப்படுத்தும் பயிற்சி : நீர்த்தடுப்பு மற்றும் / அல்லது தசையைப் பலப்படுத்தும், வடிவமைக்கும் உபகரணம் கொண்டு உடலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை இயக்குதல்.

நெகிழ்வுப் பயிற்சி : உடலை நன்றாக நீட்டி, மடக்கி, குறுக்கி பலவிதங்களிலும் மிகப்பெரிய அளவில் இயக்குதல்.

நீர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு : சில பல மருத்துவ நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நீர்ப்பயிற்சி வழிமுறைகள்.

தண்ணீரில் யோகா : சுலபமான நெகிழ்வுத்தன்மையுள்ள பயிற்சிகள் உடல் / மன ரிலாக்சேஷனுக்கு மிகவும் பயனுள்ள ஊடகமாகும்.

ஆழ்-நீர்ப்பயிற்சி : தண்ணீரில் தரையைத் தொட முடியாத ஒரு உயரத்தில், எந்தவித வேகத்திலும் செய்யப்படும் பயிற்சி. மிதக்கும் கருவிகள் பயன்படுத்தி செய்யலாம். அதேபோல் நீச்சல் குளத்தில் ஆழமான ஆனால் தரையைத் தொடாத உயரத்திலிருந்து சிறு நடைபயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ செய்யலாம்.

ஸ்ட்ரெச்சிங் : நீரில் உடற்பயிற்சி முடிந்தவுடன் உடலை நீட்டி, வளைத்து சாதாரணமான `ஸ்ட்ரெச்சிங்' பயிற்சி செய்தால், நீர்ப்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் தசை விறைப்புத்தன்மையை கட்டுப்படுத்தலாம்.

லாப் நீச்சல் : (Lap Swimming) : ஒரு நீச்சல் வீரர் பல்வேறு ஸ்டைலில், பல ஸ்ட்ரோக்குகளுடன் செய்யும் நீச்சல் பயிற்சி உடற்கட்டுப் கோப்பிற்கான சிறந்த பயிற்சி. இந்த முறை பயிற்சியை ஒரு வாரத்தில் 3 முறை 20 நிமிடங்களுக்கு செய்யவும்.

நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டும் கூட. தரையில் பயிற்சி செய்வது கடினமாக இருப்பதாக நினைப்பவர்களுக்கோ அல்லது அம்மாதிரி பயிற்சியை செய்வதற்கு உடல் இடம் கொடுக்காதவர்களுக்கோ, நீர் உடற்பயிற்சி ஒரு சிறந்த மாற்றுப் பயிற்சியாகும். ஒரு தியானப்பயிற்சி எந்த அளவிற்கு உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய உதவுகிறதோ அதே அளவிற்கு நீர்ப்பயிற்சியும் ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.

சூடான நீரில் அமிழ்வது ஒருவருக்கு உடல் வெப்பத்தை அதிகரித்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

சரியான நீர் உடற்பயிற்சி முறையை தேர்வு செய்யுங்கள்.

நீர் நடைப்பயிற்சி / ஜாகிங் : ஆழமான நீரில் இடுப்பு முதல் மார்பு வரை பல வகைகளில் கை கால்களை ஆட்டி இயக்க வேண்டும். நாம் தரையில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வது போலவே நீரிலும் செய்யவேண்டும்.

தண்ணீரில் மூழ்கி பயிற்சி செய்வது கடினமாக இருப்பவர்கள் தலையையும், தோள்களையும் நீரில் மூழ்கவிடாமல் நீரின் மேற்பரப்பிலேயே இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம்.

எவ்வாறு துவங்குவது?

உங்களுக்கு நீச்சலடிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நீச்சல் குளத்தையே பயிற்சிக்கு தேர்ந்தெடுங்கள். நீச்சல் குளத்திற்கு பக்கவாட்டில் இருக்கும் ஆழமில்லாத இடத்தில் நின்று கொண்டு ஆரம்பகட்ட பயிற்சியை செய்யுங்கள். ஆனால் நீச்சலோ, நீர்ப்பயிற்சியையோ இப்போது செய்யவேண்டாம்.

நீர் உடற்பயிற்சி செய்யும்போது, நமக்கு நீர்வறட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே நீராகாரம் ஏதாவது எடுத்துக் கொண்டே இருங்கள். மூடப்படாத அவுட்-டோர் நீச்சல் குளங்களில் பயிற்சி செய்யும்போது 15 அல்லது அதற்கும் அதிகமான எஸ்.பி.எஃப் (SPF) உள்ள வாட்டர் புரூஃப் சன்ஸ்க்ரீனை உபயோகிக்கத் தவறாதீர்கள்.

நீர் உடற்பயிற்சி செய்யத் துவங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரை முதலில் கலந்தாலோசியுங்கள். அவர் பச்சைக்கொடி காட்டியபிறகு நல்ல நீர் உடற்பயிற்சி நிபுணர் நடத்தும் வகுப்புகளில் சென்று இதைப் பயிலுங்கள்.

உடலில் சகல பிரச்னைகளுக்கும் நீர்ப்பயிற்சி உங்களுக்கு பக்கபலமாக இருந்து தீர்வளிக்கும்.

வந்தனா லூத்ரா, ஒரு புகழ்பெற்ற ஆரோக்கியம் மற்றும் அழகுக்கலை நிபுணர். உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க askvlcc@epatra.com என்ற முகவரிக்கு ஈ-மெயில் அனுப்பலாம்
மேலும்
சாக்லெட்
மௌன விரதம் இருக்க முடியுமா?
கல்லூரியில் முதல் நாள்
“சாட்டிங்” - சைபர் உலக நட்பு
வித்தியாசமாக பிறந்த நாளை கொண்டாடுங்கள்
தீபாவளி வந்தாலே . . . .