சாக்லெட் என்பது கோகோ பேஸ்ட், கோகோ கிரீம் மற்றும் சர்க்கரை போன்றவற்றால் தயார் செய்யப்படுகிறது. சாக்லெட் , தன் கிரீம் போன்ற ருசியால் நமது ஆசையைத் தூண்டி அதற்கு நம்மை அடிமையாக்குகிறது. வானங்களில் பறந்து, நாம் எதையும் சாதித்துவிடலாம் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது.
மற்ற எல்லாவற்றையும் விட சாக்லெட் நம் ஊக்க உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.
`சாக்லெட்' என்பதன் வரலாறு அழிந்து போன `ஆஸ்டெக்' நாகரிகம் முதலே இருந்துவரும் ஒரு நீண்ட பாரம்பரியம் கொண்டது. மாண்ட்டிஜுமா என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கோகோ பீன்ஸ் என்பது பணமாக புழக்கத்திலிருந்த ஒரு மதிப்பு மிக்க பொருளாகும். கோகோ என்பது சாக்லெட் பானமாக தயாரிக்கப்பட்டு வந்தது. அதிக சக்தி கொடுக்கும் ஒன்றாகவும், மதிநுட்பம், ஞானம் போன்றவற்றை வளர்ப்பதாகவும், மேலும் பாலுணர்வை அதிகப்படுத்தும் சக்தி கொண்டதாகவும் சாக்லெட் பானம் அந்தக் காலங்களில் ஆஸ்டெக்குளால் நம்பப்பட்டது.
1500 ஆம் ஆண்டுகளில் சாக்லெட்டிற்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்டெக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த சாக்லெட் உடல் எடை அதிகரிக்கவும், நரம்பு மண்டலங்களை ஊக்குவிக்கவும், ஜீரண சக்தியை மேம்படுத்தவும் பயன்பட்டது.
ஆனால் சமீப காலங்களில் அதன் பங்கு மிகவும் மாறிவிட்டது. இப்போது அதன் பயன் வெறும் நாக்கு ருசிக்காக மட்டுமே என்றாகிவிட்டது.
சாக்லெட்டில் இருக்கும் உறிஞ்சப்பட்ட கொழுப்பு, ஒருவகையான `ஸ்டியரிக் அமில' நிலையில் உள்ள கொழுப்புச் சத்தாகும். இந்த அமில நிலை கொழுப்பு, நம் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல். என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதில்லை, மாறாக கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவி செய்கிறது.
மேலும் சாக்லெட்டில் தாவரச் சத்துக்கள் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் அடங்கிய `ஹவேi-டிஒனையவேள' இருப்பதால் வயதான தோற்றத்தை தடுக்கிறது. சாக்லெட்டின் பயன்கள்
ஆம்! இது உண்மைதான், கோகோ திடமப்பொருட்கள் அடங்கிய சாக்லெட், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளது என்று இப்போது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. மிகக் குறைந்த அளவில் சாப்பிடும்போதும், இதற்கு அதிகமாக புரதச்சத்துகளை அதிகரிக்கும் குணமுள்ளது. கார்போ ஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்துகள், பச்சைப் புரதச்சத்துகள் இவை தவிர சாக்லெட்டில் பெருமளவு பொட்டாஷியம், மக்னீசியம், சிறிதளவு கால்ஷியம் மற்றும் சோடியம் மேலும் வைட்டமின்கள் ஏ1, பி1, பி2, டி, இ ஆகியவையும் அடங்கியுள்ளது.
இது தவிர சாக்லெட்டில் நிறைய பயன் தரும் பொருட்கள் உள்ளன :-
`தியோப்ரோமைன்' - இது மைய நரம்பு மண்டலங்களை ஊக்கப்படுத்துகிறது, தசை இயக்கங்களை சுலபமாக்குகிறது, பசி எடுக்க உதவுவதோடு `டையூரெடிக்' என்று அழைக்கப்படும் சிறுநீர் இளக்கியாகவும் செயல்படுகிறது.
`காஃ பைன்' - இது சோர்வை தடுக்கிறது. புத்தி கூர்மையை செயல்பட வைக்கிறது. ஒரு சராசரியான சாக்லேட் துண்டு ஒன்றில் 6 மில்லி கிராம் காஃ பைன் உள்ளது. ஆனால் நாம் அருந்தும் காபியில் 100 அல்லது 150 கிராம் `காஃ பைன்' உள்ளது.
`ஃபீனைல் எதிலாமைன்' - நாம் காதலிக்கும் போது நம் உடலில் ஒரு விதமான ரசாயன மாற்றம் ஏற்படுகிறதே அதுதான் ஃபீனைல் எதிலாமைன்! இது மன உணர்வை விழிப்புடனிருக்க தூண்டுகோலாக உள்ள ஒரு திரவப் பொருள் ஆகும்.
`டிரிப்டோஃபான்' - இது, `செரோடோனின்' என்ற ஒரு முக்கியமான அமினோ அமிலத்தை அதிகப்படியாக பெருக்க உதவிபுரிகிறது. இது இயல்பாகவே மன அழுத்தத்தை (Stress) குறைக்கும் மருந்துப் பொருளாகும். உண்மையில் செரோடினின் அளவு மூளையில் குறையும் போதுதான் நமக்கு இனிப்புப் பண்டங்கள், குறிப்பாக சாக்லேட் மீது நாட்டம் ஏற்படுகிறது.
சாக்லேட் சாப்பிடும்போது நம் மூளையில் அதிகமாக உற்பத்தியாகும் `என்டார்ஃபின்கள்' வலியைக் குறைக்க உதவுகின்றன.
ரெட் ஒயின், தேநீர், பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றில் இருக்கும் `ஃபினால்கள்'சாக்லெட்டிலும் உண்டு. இது இருதய நோயின் விளைவுகளை ஓரளவுக்குக் குறைக்கும்.
`Catechins' - இது ஒரு Anti-oxidant காரணியாகும். இது `பிளாக் டீ'யை விட சாக்லெட்டில் அதிகம். இதனால் இருதய ரத்த நாள நோய்களிலிருந்து உடலை காக்க முடியும். ஏன் புற்றுநோயைக் கூட தடுக்கும் குணமுடையதாம் இது!
மேலும் சாக்லெட் மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போதோ அல்லது காதல் வயப்படும்போதே நம் மூளையில் இயல்பாகவே சுரக்கும் `செராடோனின்' மற்றும் `ஃபினைல் எதிலமைன்' என்ற இரு பொருட்கள் சாக்லெட் சாப்பிடும்போது அதிகமாக சுரக்கிறது. இது நம் மனத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
சாக்லெட்டிற்கு அதன் கெட்ட பெயரை ஏற்படுத்துவது அதிலுள்ள உறிஞ்சப்பட்ட கொழுப்பு மற்றும் கஃபைன்தான். காரணம், சாக்லெட்டில் உள்ள உறிஞ்சப்பட்ட கொழுப்பில் `கோகோபட்டர்' என்ற பொருள் இருப்பதுதான். இந்த `கோகோபட்டர்' ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகிறது. 100 அல்லது 150 மி.கி. காபியை அருந்துவதை விட சாக்லெட் ஒன்றும் தீங்கானதல்ல.
ஆனால், எதையும் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் விளைவு மோசமானதாகவே இருக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்! கொழுப்புச்சத்துகள், எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள் இவற்றை அதிகமாக உண்பதால் எடை கூடுவதும், சர்க்கரை நோயும், இருதய நோயும் உண்டாகிறது. சாக்லெட் சாப்பிட்டால் நாம் பருமனாகி விடுவோம் என்று அர்த்தமல்ல. சாக்லெட் சாப்பிடுவதை மற்ற உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் அதன் விளைவை சமப்படுத்த முடியும்.
ஆகவே பயமின்றி சாக்லெட் சாப்பிடுங்கள். உங்கள் இதயம் உங்களுக்கு நன்றி கூறட்டும்!
வந்தனா லூத்ரா, ஒரு புகழ்பெற்ற ஆரோக்கியம் மற்றும் அழகுக்கலை நிபுணர். உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க askvlcc@epatra.com என்ற முகவரிக்கு ஈ-மெயில் அனுப்பலாம்.
|