முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  மகளிர் விருப்பம்
 
மௌன விரதம் இருக்க முடியுமா?
Webdunia
-ஷைலஜா

"யாகாவாராயினும் நா காக்க" என்கிறார் வள்ளுவர்.

சொல்லுக்கு ஒரு அர்த்தம்; மௌனத்திற்கோ பல அர்த்தங்கள்! கண்ணொடு கண் நோக்கியதிலேயே ராம காவியம் பிறந்ததே?

இத்தகைய சிறப்பு வாய்ந்த மௌனத்தை மாதம் ஒரு முறையாவது கடைப் பிடித்தால் உடலுக்கும் நல்லது மனதுக்கும் நல்லது.

மௌன விரதமாவது பேசாதிருக்கும் விரதம்!

வாய் தானே பேசக் கூடாது என எழுதிக் காட்டுவதும் சைகையில் பேசுவதும் சரியல்ல. அதில் மௌன விரத நிறைவு ஏற்படாது. மௌனம் என்பது ஆழ்நிலையில் அமைதியாய் இருத்தல். மோன நிலை என்பார்கள். ஆனந்தம் பிறக்கும் நிலை இங்கு தான் உருவாகிறது. ஆகவே தான் அவ்வை பிராட்டியும் மோனம் என்பது ஆனந்த வரம்பு என்கிறார்.

பகவான் ரமணர் மோனத்தவமிருந்தது அனைவரும் அறிந்ததே "ளுநயசஉh in nஉநைவே ஐனேயை" எனும் தனது புத்தகத்தில் பால் பிராண்டன் ரமணரின் ஆழ்ந்த மௌனத்தை போற்றி எழுதி இருக்கிறார்.

மகரிஷிகள் பலர் மோனத் தவமிருந்து சித்தி பெற்றனர்.

ஒரு குடும்பத்தில் மனைவி ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள்.

அவளுக்கு ஒருமுறை பல்நோய் வரவும் மருத்துவர் பரிசோதித்து கணவரிடம் சொன்னார், " உங்க மனைவிக்கு பல் மிகவும் கெட்டு இருக்கிறது உடனே எடுக்க வேண்டும். சற்று கஷ்டமான பணி தான் ஆனாலும் செய்து விடுகிறேன்..ஆனால் இந்த ஒரு பல் எடுப்பதினால் அவர்களால் நாள் முழுவதும் பேச இயலாதே?"

கணவன் மகிழ்ச்சியாய் உடனே "டாக்டர்! ஏழெட்டு பற்கள் எடுக்க முடியுமா? எவ்வளவு செலவானாலும் சரி" என்றாராம்!
மேலும்
கல்லூரியில் முதல் நாள்
“சாட்டிங்” - சைபர் உலக நட்பு
வித்தியாசமாக பிறந்த நாளை கொண்டாடுங்கள்
தீபாவளி வந்தாலே . . . .
கட்டடிப்போம் கட்டடிப்போம் காலேஜூக்கு