உங்கள் பள்ளி வாழ்க்கை முடிந்து, கல்லூரியில் காலடி வைக்கும் நாள் வந்து விட்டது. நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும், கல்லூரியில் முதல் நாள் உங்களுக்கு ஒரு சுவையான அனுபவமாக இருக்கும். நீங்கள் கல்லூரிக்கு சரியான முறையில் செல்ல, இதோ சில பயனுள்ள குறிப்புகள்.
1. நேரம் :
நேரத்துக்கு சற்று முன்பாகவே கல்லூரி செல்லுங்கள். இது எல்லா நாட்களுக்கும் பொருந்தினாலும், முதல் நாளுக்கு மிகவும் முக்கியமாகும். அப்போது நீங்கள் உங்கள் வகுப்பில் இல்லாத மற்ற மாணவிகளுடன் பழக வாய்ப்பு ஏற்படும். அத்தோடு உங்கள் வகுப்பறையை தேடி ஓட வேண்டிய அவசியமும் இருக்காது.
2. உடை :
சரியானபடி உடை அணியுங்கள். உங்களுக்கு வசதியாக இருக்கும் ஏதாவதொரு சுத்தமான உடை அணிந்து செல்லுங்கள். இதற்கு முன் நீங்கள் அணியாத மாடல் உடைகளை அணியாதீர்கள். அது மாதிரி உடையை நீங்கள் அடிக்கடி அட்ஜஸ்ட் செய்ய நேரிடலாம். அதனால் கஷ்டமாக இருக்கலாம்.
3. மேக்கப் :
உங்கள் மேக்கப்பை லேசாகப் போடவும். நீங்கள் அழகாகத் தோன்ற வேண்டும். அதிக மேக்கப் உங்களை வயதானவர் போல் தோன்றச் செய்யலாம்.
4. காலணிகள் :
சரியான காலணிகள் மிகவும் அவசியம். புதிய காலணிகளைத் தவிர்க்கவும். உங்கள் காலுக்கு வசதியாகவும், நீண்ட நேரம் நிற்பதற்கு இடைஞ்சல் இல்லாத காலணியாகவும் அணியுங்கள். ஷார்ப் ஹை ஹீல்ஸை தவிர்க்கவும்.
5. நகைகள் :
அதிக தங்க நகைகளை அணியாதீர்கள். நீங்கள் செல்வது கல்லூரி, திருமண நிகழ்ச்சி அல்ல! எளிய பேஷன் நகைகள் உங்கள் உடைக்கு ஏற்றதாக அணியவும்.
6. முடி அலங்காரம் :
நீண்ட முடியானாலும், குட்டை முடியானாலும், சுத்தமாக வாரி விடப்பட்ட கூந்தல் நல்லது. கஷ்டமான அலங்காரங்கள் பார்ட்டிக்கு தேவையே தவிர, கல்லூரிக்கு அல்ல!
7. புன்னகை :
எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை உங்களுக்கு நல்ல தோழிகளை கிடைக்கச் செய்யும். பலரும் உங்களை அறியச் செய்யும்!
8. தோழிகள் :
உங்கள் பழைய பள்ளி தோழிகளை நீங்கள் உங்கள் கல்லூரியில் சந்திக்ககூடும்.பழைய தோழிகளோடு, புதிய தோழிகளையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
|