பிறந்தநாள் வருகின்றதா? கொண்டாட்டம் தான்! அதை எப்படி கொண்டாடுவது என்று ஆயிரம் முறை யோசித்திருப்பீர்கள். நண்பர்களை வீட்டிற்கு அழைக்கலாமா, வெளியே சென்று சினிமா பார்க்கலாமா, எந்த உடை வாங்குவது இப்படி எத்தனையோ கேள்விகள் மனதில் எழலாம். பிறந்தநாள் கொண்டாடும் அனைவர் மனதிலும் எழும் கேள்விகள் இவை மற்றவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாட வேண்டுமா?
இந்த முறை உங்கள் பிறந்தநாளில் நீங்களும் மற்றவர்களும் சந்தோஷம் பெற, இதோ சில வழிகள் :-
பிறந்த நாளன்று நீங்கள் நண்பர்களோடு செலவு செய்ய நினைத்துள்ள தொகையிலிருந்து ஒரு பகுதியை சமூக சேவை நிறுவனங்களுக்கு நன்கொடையாக கொடுக்கலாம்.
நன்கொடை கொடுக்கும் அளவிற்கு பணமில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நன்கொடை கொடுக்க பெரிய தொகை தேவையில்லை. சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் நீங்கள் கொடுக்கும் சிறிய தொகையும் முக்கியமானது தான்.
உங்கள் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் இவர்களின் வாழ்வில் உங்கள் பிறந்தநாள் இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்கும் ஆசிகள் பெற்று தரும்.
ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடலாம். தாய்,தந்தை, உறவினர் என்று யாரும் இல்லாத இந்த குழந்தைகளோடு, உங்கள் பிறந்தநாளை அவர்கள் பிறந்தநாளாக கொண்டாடி மகிழலாம்.
உங்களோடு உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரையும் அழைத்து செல்வதால் மகிழ்ச்சியை பன்மடங்காக்கலாம்.
இவ்வாறு கொண்டாடிய பிறந்தநாள், உங்களுக்கு மட்டுமின்றி, பலருக்கும் மறக்கமுடியாத நாளாக நினைவில் தங்கும்.
மேலும் படிக்கவும்
நீங்கள் ஒரு நல்ல தோழியா ?
ஈவ் டீஸிங்
hவவயீ://றநரெடயபயஅ.உடிஅ/றடிஅநn/கூநநயேபந/2000மூ09/30மூவநநயேபந1.hவஅ
வாழ்க்கையின் வாசல் !
இறுதியாண்டு வந்து விட்டது, இன்னும் சில மாதங்களில் கல்லூரி விடும் நேரமும் வந்து விட்டது. கல்லூரியில் கழிந்த இரண்டாண்டுகளை யோசித்து கொண்டிருக்க நேரமில்லை. மீதமுள்ள மாதங்களை உபயோகமான முறையில் கழிக்க என்ன செய்யலாம் என்றே யோசிக்க வேண்டும். இதோ அதற்கு சில டிப்ஸ்.
எது முக்கியம் :
நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும், கட்டடிக்க வேண்டும், நண்பர்களோடு ஊர் சுத்த வேண்டும் என்று நீங்கள் செய்ய வேண்டிய பட்டியல், நீண்டு கொண்டே போகும். எது முக்கியம் என்று முடிவு செய்வது நல்லது. நல்ல மதிப்பெண்களை பெற சில சமயங்களில் ஊர் சுத்துவதை கட்டடிக்க நேரிடலாம் !
படித்தால் மட்டும் போதுமா?
இறுதியாண்டில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாலும் படிப்பிலேயே முழ்கிவிடுவதும் நல்லது என்று சொல்ல முடியாது. விளையாட்டு, கலை நிகழ்ச்சி ஆகியவற்றில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை சரியான முறையில் வளர்த்துக் கொள்ளவும் இந்த ஆண்டை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.
சீனியரின் பதவி
முதலாண்டில் சீனியர்களிடம் மாட்டிக் கொண்டு முழித்தது நினைவிருக்கின்றதா? “ இப்போது நான் தான் சீனியர், ஜூனியர்களை துன்புறுத்துவதுதான் என் வேலை” என்ற கொள்கையை விட்டு விடுங்கள். சீனியராக இருப்பதால் கிடைக்கும் யூனியன் பதவி அல்லது இறுதியாண்டு மாணவர்களுக்காக மட்டுமே நடக்கும் போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளுங்கள்.
நண்பர்கள் : கல்லூரி படிப்பு முடிந்தாலும் நண்பர்களோடு நட்பு முடியாது. நண்பர்களோடு கழித்த இந்த நாட்கள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிலிருக்கும். “எந்த சினிமாக்கு போலாம்?” என்பதிலிருந்து “அவனை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” என்பது வரை உங்களோடு இருப்பது உங்கள் நண்பர்கள் தான். வேலையா ? மேற்படிப்பா ?
கல்லூரிக்குப் பின் வேலையில் அல்லது மேற்படிப்பு என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். கல்லூரியில் உள்ள ஆலோசகரின் உதவியை நாடுங்கள். வேலைக்கு சென்றாலும் நீங்கள் படிப்பை தொடரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சற்றே விலகி :
உங்கள் தோழிகள் தேர்ந்தெடுக்கும் தொழிலையே நீங்களும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு விருப்பமான தொழில் நடிப்பு, சமூக சேவை என்று இருந்தாலும் தயங்காமல் உங்கள் கனவை நினைவாக்க முயற்சியுங்கள்.
சோம்பேரிகளுக்கு :
இறுதியாண்டு இன்னொரு முறை தொடராமல் இருக்க...
கடினமாக உழைக்க தயாராகவும் !
வாழ்க்கையின் வாசலில் காத்திருக்கும் மாணவர்களே, “ஆல் தி பெஸ்ட்” !
|