மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » குழந்தை வளர்ப்பு » காலை வெ‌யி‌ல் ந‌ல்லது (Morning Sun light good for child)
Feedback Print Bookmark and Share
 
குழ‌ந்தைகளை காலை‌யி‌ல் வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு வ‌ந்து ‌சி‌றிது நேர‌ம் வை‌த்‌திரு‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் காலைய‌ி‌ல் ‌வீசு‌ம் தூ‌ய்மையான‌க் கா‌ற்று‌ம், இதமான வெ‌யிலு‌ம் உடலு‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம்.

அ‌திகாலை 7 ம‌ணி‌க்கு‌ள் வரு‌ம் வெ‌யி‌லி‌ல் நமது உட‌ல் ப‌ட்டா‌ல், அ‌ந்த சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் இரு‌ந்து வை‌ட்ட‌மி‌ன் டியை தோ‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்யு‌ம் ஆ‌ற்ற‌ல் உ‌ள்ளது. எனவே காலை வெ‌யிலை தோ‌லி‌ல் படுமாறு குழ‌ந்தையை வை‌த்‌‌திரு‌ங்க‌ள்.

இ‌ந்த வெ‌யி‌ல் உட‌லி‌ல் பட வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி‌ரியு‌ங்க‌ள் எ‌ன்று மு‌ன்னோ‌ர்க‌ள் சொ‌ல்ல‌ி வை‌த்தா‌ர்க‌ள்.

பலரு‌ம் காலை 8 ம‌ணி‌க்கு‌த்தா‌ன் க‌ட்டிலை ‌வி‌ட்டு இற‌ங்குவா‌ர்க‌ள். ஆனா‌ல் உ‌ங்களது குழ‌ந்தையையாவது இ‌ந்த வெ‌ளி‌ச்ச‌த்தை‌ப் பா‌ர்‌க்க ‌விடு‌ங்க‌ள். அதே வாய‌்‌ப்‌பி‌ல் உ‌ங்களு‌க்கு‌ம் வை‌ட்ட‌மி‌ன் டி ‌கிடை‌க்கு‌ம்.

கொ‌ஞ்ச‌ம் வள‌ர்‌ந்த குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் மாடி‌யி‌ல் 7 ம‌ணி‌க்கு‌ள் செ‌ன்று ‌சில எ‌ளிய உட‌ற் ப‌யி‌ற்‌சிகளை‌க் க‌ற்று‌க் கொடு‌‌த்து செ‌ய்ய‌‌ச் சொ‌ல்லு‌ங்க‌ள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: காலை வெயில் நல்லது