நீங்கள் விரும்பினால் உங்கள் குழந்தைக்கு சமஸ்கிருதமோ, ஹிந்தியோ, பிரெஞ்ச் மொழியையோ வெளியில் வகுப்புகள் அனுப்பி சொல்லிக் கொடுக்கலாம்.
மிகவும் எளிதான வேலை இது. பள்ளியில் ஆங்கிலமும், தமிழும் படிக்கும் குழந்தைகள், வெளியில் வகுப்புகள் சென்று ஏதேனும் ஒரு மொழியைப் படிக்க முடியும்.
மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் இதனை படிக்கலாம். ஆனால் எல்லாமே 11ம் வகுப்பு அல்லது 9ம் வகுப்பு பயிலும் போது படித்தால் போதும். மிக இளம் வயதில் படித்து முடித்துவிட்டு அவர்கள் வேலைக்குப் போவதற்குள் எல்லாம் மறந்து போயிருக்கக் கூடாது.
எந்த பயிற்சியாக இருந்தாலும் அவர்களது விருப்பத்திற்கேற்ப இருக்க வேண்டுமேத் தவிர உங்கள் வற்புறுத்தலுடன் இருக்கக் கூடாது. |