சென்னை மாநகராட்சியில் குழந்தை பிறந்த பிறகு, தடுப்பூசி போட வேண்டிய நாட்கள் பற்றிய தகவல்கள் தாய்மார்களுக்கு செல்பேசி குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கப்படும் என்று தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த உள்ளாட்சித் துறை கொள்கை குறிப்பில், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடிசை வாழ் மக்களுக்கும் படிப்படியாக சுகாதார அட்டை வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள குடிசைப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, சோதனை முறையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சியின் அனைத்து மருந்தகங்கள் மற்றும் சுகாதார மையங்கள் ரூ.1 கோடியில் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
இப்புதிய முறையின் மூலம், பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களுக்கு நோய் தடுப்பு ஊசி பற்றிய விவரங்கள் மற்றும் பரிசோதனைகள் குறித்து குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|