மழை மற்றும் குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு சளி பிடித்துக் கொண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
அதிலும் ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதுபோன்ற குழந்தைகளுக்கு இஞ்சி ரசம் வைத்துக் கொடுக்கலாம்.
எப்போதும் ரசம் வைப்பது போல்தான் இஞ்சி ரசமும். ரசப் பொடியில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்துடன் ஒரு துண்டு இஞ்சியையும் வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் சளி அகலும்.
குழந்தை பிறந்தவர்களும் இஞ்சி ரசம் வைத்து சாப்பிடலாம். மிகவும் நல்லது. |