முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > குழந்தை வளர்ப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌த்தாண கஞ்சி மாவு
குழ‌ந்தைகளு‌க்கு ஏ‌ற்ற உணவு

ச‌த்தாண க‌ஞ்‌சி மாவு தயா‌ரி‌க்க‌த் தேவையான பொரு‌ட்க‌ள். இவ‌ற்றை தர‌ம்பா‌ர்‌த்து வா‌ங்கு‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கானத‌ல்லவா?

வேர்க்கடலை
கேழ்வரகு
உடைத்த கடலை
முந்திரி
சோளம்
ஜவ்வரிசி
ஏலக்காய்
கோதுமை
புழுங்கல் அரிசி

இதில்...

வேர்க்கடலை, கேழ்வரகு, உடைத்த கடலை, முந்திரி ஆகியவற்றை லேசாக (வெறும் கடாயில் ஒரு சில நிமிடங்கள் போட்டு எடுத்தாலே போதும்) வறுத்துக் கொள்ளவும்.

அப்போதுதான் கஞ்சி மாவு கெடாமல் இருக்கும்.

பின்னர் அரைவை எந்திரத்தில் அனைத்தையும் போட்டு அரைத்து பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

இந்த கஞ்சி மாவை 2 கரண்டி ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

அதனை அடுப்பில் வைத்து அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்கவும். 10 நிமிடம் நன்கு கஞ்சி மாவு வெந்ததும் அதில் சர்க்கரை சேர்க்கவும்.

சூடு ஆறியதும் சிறிது பால் ஊற்றி குழந்தைக்கு அளிக்கவும். மிகவும் சத்தான உணவு.

காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்திலோ அல்லது காலை உணவாகவோ இதனைக் கொடுக்கலாம்.

கஞ்சி மாவு நன்கு வேக வேண்டும் என்பது முக்கியம்.
மேலும்
காய்கறி சாதம்
மசித்த ஆப்பிள்
பேறுகால உதவித் தொகை உயர்வு
தா‌ய்‌ப்பா‌ல் குடி‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் அ‌றிவு‌த் ‌திற‌ன் வளரு‌ம்!
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் மார்பக அழகு குறையாது!
கருத்தரித்த காலத்தில் ரத்த அழுத்த ஆபத்து?