குழந்தைகளுக்கான உணவு முறைகள்
வெறும் பருப்பு சாதத்தையே எத்தனை நாட்களுக்குத்தான் ஊட்ட முடியும். இது காய்கறி சாதம்.
1 வயது முதல் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம்.
முதலில் ஒரு கைப்பிடி அரிசியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
உங்கள் குழந்தைக்கு கொடுக்க நினைக்கும் காய்கறிகளை பொடியாக நறுக்கி அதில் போடவும்.
பின்னர் தேவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். காய்கறிகளும், சாதமும் நன்கு குழைந்தது போல் ஆனதும் இறக்கிக் கொள்ளவும்.
அதில் சிறிது நெய் விட்டு குழந்தைக்கு இளஞ்சூட்டோடு அளிக்கவும்.
|