முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  குழந்தை வளர்ப்பு
 
குழந்தைத் தொழில் கொடூரங்கள்
Webdunia
குழந்தைகளுக்கான தினம் அண்மையில் தான் வந்து போயிருக்கிறது. இந்த தருணத்தில் அதிர்ச்சி தரும் சில செய்திகளும் தெரிய வருகின்றன. உலகிலேயே நம் இந்தியாவில் தான் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையில் அதிகம்! உலக வங்கியின் கணக்குப்படி சுமார் 5 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர்!

உலக வங்கியின் கணக்குப் படி சுமார் 5 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர். அதாவது இந்தியாவின் மக்கள் தொகையில் 5ரூ. சுமார் 41 கோடி குழந்தைகள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) இதில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் 11 கோடி. இந்த கணக்குப் படி

* சுமார் 30 கோடி குழந்தைகள் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

* இந்த முப்பது கோடியில் 5 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.

* 8.5 கோடி குழந்தைகள் பள்ளிகூடம் செல்லாதவர்கள்
என்று ஆய்வு தெரியப்படுத்துகிறது.

இந்தியப் பிரதமர் திரு அப்துல் கலாம் இந்தியா 2020 ன் தூண்களாகக் கருதும் இந்த சின்னஞ்சிறு மலர்களில் பலர் இன்று நகர்புறத்தில் டீ, காபி விற்கும் கடையிலும் மெக்கானிக்-பஞ்ச்சர் சரி பார்க்கும் கடைகளிலும் தினக்கூலிக்கு வேலை பார்க்கிறார்கள். கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம். அங்கு குழந்தைகள் செங்கல் சூளை, அரிசி ஆலை, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தங்கள் வாழ்க்கையின் வசந்தத்தையே இழக்கின்றனர்.

இன்றும் பல இடங்களில் கொத்தடிமைகளாக குழந்தைகள் சில ஆயிரங்களுக்கு விற்கப்படும் வழக்கம் உள்ளது. குடும்ப பாரத்தை சுமக்கவே இவர்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்பது இன்னொரு கொடுமையான விசயம்.

குழந்தைகள் தொழிலாளிகள் ஆவது ஏன்?

* 70% வறுமை கோட்டுக்கீழ் உள்ள காரணங்கள்
* 20% கடன் சுமைகளுக்காக கொத்தடிமை ஆக்குதல்
* பெற்றோருக்கு வேலை நிரந்தரமற்ற தன்மை
* கட்டாயக் கல்வி திட்டம் சரிவர அமுலாக்கப்படாதது
* இந்திய நாட்டில் 26 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். (வருட சம்பளம் ரூபாய் ஐந்தாயிரத்துக்கு கீழ்) இது ஒரு முக்கிய காரணம்.

வறுமை ஒழிப்பும் 100% துவக்கப்பள்ளி கல்வி செயல்படுத்தாமையுமே இன்றைய இந்த நிலைமைக்கு முக்கிய காரணங்கள் தோன்றுகின்றன.

2005 ஆண்டு தமிழக அரசு உலக வங்கியிடம் வறுமை நீக்க ரூ 700 கோடியை ( 160 ) கடனாக வாங்கியுள்ளது. திட்டத்தின் படி 2011 செப்டம்பரில் இந்த தொகை அனைத்தும் வறுமை ஒழிப்புக்கு உபயோகப்படுத்தும் என்று தமிழக அரசு உலக வங்கிக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது. இது போன்று மற்ற மாநிலங்களும் கடன் பெற்று வறுமை நீக்க முயற்சிப்பதாக உலக வங்கியின் இணையம் தகவல் தருகிறது. இது நடைமுறை சாத்தியமானால் மகிழ்ச்சி தான்.

மின் இணையத்தில் தேடிய போது கிடைத்த எடுத்துக்காட்டுக்கள்:

1. 1920-30களில் இலங்கை அரசு கட்டாய துவக்க கல்வி திட்டம் கொண்டு வந்து நல்ல பலன்களை கொண்டு வந்துள்ளது. 1946ல் 58ரூ துவக்க கல்வி கற்றவர்களானர். 1984ல் 86ரூ மக்கள் தொகை துவக்க கல்வி இலக்கை அடைந்தது. அதே காலகட்டத்தில் 1946ல் 13 சதவீகிதமாக இருந்த குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு இப்போது 5.3ரூ ஆகக் குறைந்துள்ளது.

2. நம் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று 94ரூ மக்கள் துவக்க கல்வி பயின்றவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக சுமார் 1ரூ அளவுக்கு குழந்தை தொழிலாளர்கள் குறைந்துள்ளனர்.

இதை வைத்து பார்க்கும் போது மற்ற மாநிலங்களும் இலங்கை, கேரளாவை போன்ற கட்டாய கல்வி திட்டத்தை கொண்டு வந்து 100ரூ கல்வி இலக்கை அடைந்தால் நிச்சயமாக நம் முதல்-குடிமகன் காணும் கனவை இந்தியா 2020ல் அடைய முடியும்.
மேலும்
குழந்தையின் மூளைத்திறன்
குழந்தைகளும் இன்டர்நெட்டும்
குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
தாய்ப்பால்... ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை
தாய்ப்பால் தரும் சக்தி
புட்டிப்பால் உணவு