குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்க என்ன செய்ய வேண்டும். இதோ அதற்கான டிப்ஸ்...
* வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில்அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் (Progesterone) ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
* மேலும் தினமும் சுமார் 5 அல்லது 6 கப் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.
* அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள், மீன் முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
* அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா சிறிய மீன்களும் சாப்பிடலாம்.
|