முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  குழந்தை வளர்ப்பு
 
அழும் குழந்தைகள்
Webdunia
குழந்தை பிறந்ததிலிருந்து சில மாதங்கள் வரை அழுது கொண்டு தான் இருக்கும் . ஒரு குழந்தை தன் தேவையை ஆரம்ப காலங்களில் தனது அழுகையின் மூலமாகத் தான் தெரிவிக்கிறது. பச்சிளங்குழந்தைகள் அழுவதும் அவர்களின் நுரையீரலுக்கு நல்ல பயிற்சி என்பது சிலரின் அபத்தமான வாதம். ஆராய்ச்சிகளின் முடிவில் அழும் குழந்தையை உடனே கவனிப்பது தான் சிறந்த செயல் என்று தெரிய வருகிறது. பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் அழுகையை உடனே கவனித்து அதன் தேவையை நிறைவேற்றி விட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்கு அதன் அழுகை பெருமளவு குறையுமாம்.

தாய்க்கும் சேய்க்கும் இடையே நம்பிக்கையான உறவும் பிணைப்பும் உருவாக இதுவும் ஒரு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
.
** குழந்தை ஏன் அழுகிறது?

* பசி தான் முதல் காரணம். பால் குடித்ததும் அது அழுகையை நிறுத்தி விடும்.

* சில நேரங்களில் குழந்தையின் வயிற்றில் காற்று ஏறி விடும். அப்போது குழந்தைக்கு வயிறு வலிக்கும். அது மாதிரியான நேரங்களில் குழந்தையை தோளில் போட்டு முதுகில் தட்டி விட்டால் போதும். குழந்தையின் உடைகளையும் கவனிக்க வேண்டும். சின்ன சின்ன எறும்புகள் பூச்சிகள் கடித்தாலும் குழந்தை அழும். குழந்தை மிகவும் குளிர்ச்சியாகவோ சூடாகவோ உணர்ந்தாலும் அழும்.

* சில குழந்தைகளுக்கு தங்களைச் சுற்றி மனித நடமாட்டம் இருந்து கொண்டே இருக்க நினைக்கும். அப்படி யாருமே இல்லை என்றால் அதற்கு அழும். இது போன்ற நேரங்களில் தாய் வீட்டில் எங்கிருந்தாலும்
தன் குரலைக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். குழந்தையுடன் விளையாட வேண்டும்.

* குழந்தையின் நாப்கினில் ஈரம் பட்டு அது உடம்பில் பட்டாலும் குழந்தை அழும்.

* அதிக நேரம் தாய் தன்னை விட்டுப் பிரிந்தால் தாயின் ஸ்பரிசதிற்காக குழந்தை ஏங்கிஅழும்.

* அதிக நேரம் விழித்தாலும் குழந்தைகள் எரிச்சலாகி உடல் சோர்வாகி அழஅரம்பித்து விடுவார்கள். குழந்தைக்கு ஓய்வு தேவை. அது களைப்பின்றி விழித்திருக்கும் நேரத்தில் மட்டும் விளையாட வேண்டும்.

முதல் சில மாதங்களிலேயே குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்தி தேவையை நிறைவேற்றி சிரிப்பை மலரச் செய்தால் பின் வரும் காலங்களில் குழந்தையின் மன வளர்ச்சியை எதுவும் பாதிக்காது. உடல் வளர்ச்சியும் இதனால் சீராக இருக்கும்.

மேலும்
கர்ப்ப காலத்தில் வரும் காமாலை நோய்