வாஷிங் மெஷின் பராமரிப்பு

புதன், 28 அக்டோபர் 2009( 14:22 IST )
வாஷிங் மெஷினை அதிகமாக தண்ணீர் படும் இடத்திலோ, வீட்டிற்கு வெளியிலோ அல்லது பாத்ரூமிலோ வைக்கக் கூடாது.
அதிக வெயில் படும் இடத்தில் இருந்தாலும் வாஷிங் மெஷின் பழுதாகிவிடும்.
தண்ணீர் படும் இடத்தில் இருந்தால் எளிதில் துருப்பிடித்து விடும்.
வாஷிங் மெஷின் வாங்கி இரண்டாண்டுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்யக் கொடுங்கள்.
மேல் பக்கமாக தண்ணீர் ஊற்ற வேண்டி வந்தால், சுவிட்ச்களின் மீது டவல் அல்லது பெட்ஷீட் போன்ற கனமான துணியைப் போட்டு விடவும்.
சுவிட்ச்களில் தண்ணீர் பட்டுவிட்டால் பழுதாகிவிடும்.