வீட்டில் எந்த அறையிலும் தூசு சேராமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக படுக்கையறை சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கையறையை தூசி சேராமல், சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் என்னவென்றால் அங்குதான் நாம் பல மணி நேரம் தூங்க வேண்டி உள்ளது.
வீடு சுத்தமாக இருந்தால், தூசியால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க முடியும். அதுமட்டுமின்றி, வாரம் ஒரு முறையாவது தலையணை உறை, போர்வை ஆகியவற்றை சலவை செய்ய வேண்டும்.
வீட்டில் குளிர்சாதனம் இருந்தால், ஏர் பில்ட்டரை வாரம் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டின் தரைகளையும் ஈரத்துணியால் அடிக்கடி துடைக்க வேண்டும். அப்போது தான், வீடு பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கும். |