பொதுவாக வெளி ஆட்கள் வராத இடம் படுக்கை அறை தான். அதுதான் அந்த அறையின் பலவீனமே.
வீட்டில் பழைய பொருட்கள், அழுக்கான ஆடைகள் என எல்லாக் குப்பைகளும் சேரும் இடமாக படுக்கையறை மாறிவிடுகிறது.
அழுக்கு ஆடைகளைப் போட வைத்திருக்கும் கூடையோ எப்போதும் சுத்தமாக இருக்கும். இதனை மாற்றி அழுக்கான ஆடைகளை வைக்கத் தனியாக ஒரு கூடை வைத்து அதில் மட்டும் அழுக்கான ஆடைகளைப் போட்டு வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அதுவும் காற்று போகும் வசதியுடன் கூடியதாக அந்தக் கூடை அமைய வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
கட்டிலுக்கு மிக அருகிலேயே அந்தக் கூடையை வைக்காதீர்கள். நாற்றம் வரும். கூடைக்கு அருகே வாசனை மெழுகுகள் ஒன்றைத் தொங்க விடலாம். |