தரம் குறைந்த அலுமினிய உள்பாத்திரம் உபயோகிப்பதாலும் குக்கரின் நிறம் மாறலாம். அதில்லாமல், சமைக்க பயன்படுத்தப்படும் நீர் மற்றும் சமைக்கும் பொருளின் அமிலத்தன்மையாலும் குக்கர் நிறம் மாறலாம்.
சமையல் செய்யும் போழுது குக்கரில் ஊற்றப்படும் நீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு விட்டால் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.
காளான் போன்றவற்றை அலுமினியப் பாத்திரங்களில் சமைத்தால் பாத்திரத்தின் நிறம் மாற வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறையும் குக்கரை நன்றாக தேய்த்துக் கழுவி வையுங்கள். அப்படி செய்யாமல் விட்டால் நாள்பட நாள்பட அழுக்கு சேர்ந்தும் நிறம் மாறலாம்.
சமைக்கும் நேரம் அரிசியின் தரம் மற்றும் நீரின் அளவைப் பொருத்து மாறுபடும். எனவே அதற்கேற்ற அளவிற்கு விசில் வையுங்கள். |