தோற்றத்தை மாற்றும் “ஹேர் டை”

செவ்வாய், 19 ஜூன் 2012 (16:45 IST)

யை மறைக்க ஹேர் டை என்ற காலம் போய், அழகை மேம்படுத்த ஹேர் டை என்ற காலம் வந்துவிட்டது. அயல்நாடுகளில் தலைமுடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கம் வெகுநாட்களாகவே உள்ளது.

இப்போது நம் நாட்டிலும் இளைஞர், இளைஞிகளிடையே தலைமுடியை டை செய்து கொள்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஹேர் டை பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு செயல்பட்டால் அது உங்கள் தோற்றத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

ஒன்றும் தெரியாமல், எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்வோமே என்று செய்தால் அதன் விளைவு கோமாளித்தனமாக இருக்கும்!

நீங்கள் முதல் முறையாக முடியை டை செய்யுமுன் ஒரு அழகு நிலையம் (ப்யூட்டி பார்லர்) சென்று அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

உங்களுக்கு என்ன தேவை என்பதை அவரிடம் விளக்கவும். நீங்கள் புத்தகங்களில் பார்த்த படங்களையும் எடுத்துச் செல்லலாம். உங்கள் நிறத்திற்கேற்ற, உங்கள் முடியின் அமைப்புக்குத் தகுந்த நிறம் என்ன என்பது ஒரு அழகுக் கலை நிபுணரால்தான் கூற முடியும்.

அழகு நிலையம் செல்லாமல் நீங்களே முடிவெடுக்க விரும்பினால், உங்கள் முடியின் ஒரு சிறிய பாகத்தை டை செய்து பார்க்கவும். அல்லது டை செய்து கொண்டு வெளியில் செல்லும் போது ஏற்படும் விளைவுகளைத் தாங்கும் மன உறுதியை தயார் செய்து கொள்ளவும்!

யின் நிறம் முடிவாகிவிட்டது. வீடோ அல்லது அழகு நிலையமோ, முதலில் ‘அலர்ஜி டெஸ்ட்’ செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஹேர் டை உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் முடியை முழுவதாக டை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. தலையின் முன் பக்கத்திலோ பின் பக்கத்திலோ மேலே இருக்கும் சில முடிகளை மட்டும்
“ஹை லைட்” செய்யலாம். இதை பராமரிப்பதும் எளிது.

டை செய்த முடிக்கு அதிக பராமரிப்பு தேவை என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கேற்ற ஷாம்பூ, கண்டிஷனர் ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.

உங்கள் முடியை மருதாணியால் டை செய்திருந்தால், அந்த நிறம் முழுமையாக மாறும் வரை கெமிக்கல் ஹேர் டை உபயோகிப்பதை தவிர்க்கவும்.

குளித்த பிறகு ஹேர் ட்ரையர் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முடி அதிகமாக சூடானால் உங்கள் டையின் நிறம் மாறி, ஆங்காங்கே வெளுத்து அசிங்கமாகத் தோற்றமளிக்கும்.

நாட்கள் செல்லச் செல்ல உங்கள் முடி வளருவதால், டை செய்த முடியில் புதிதாக வளர்ந்த முடி வித்தியாசமாகத் தோற்றமளிக்கும். அதனால் இரு வாரத்துக்கு ஒரு முறை வளர்ந்த முடியை ‘டச் அப்’ செய்து கொண்டால் அழகாக இருக்கும்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

இன்றைய மங்கை

ஹேர் கலரிங் விதங்கள்

மஞ்சகலரு ஜிங்குசாங், பச்சகலரு ஜிங்குசாங்.. இந்த வண்ணங்கள் நம் வாழ்வில் எல்லா ...

கண்களை கவரும் உதடுகள்

முகத்திற்கு மேக்கப் போட நேரமில்லை என்றாலும் உதடுகளுக்கு மேக்கப் போட யாரும் மறப்பதில்லை. ...

சின்னச் சின்ன ஆலோசனை-பின்பற்றித்தான் பாருங்களேன்

வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன. பட்டால் தான் ...

உதடுகளுக்கு என்ன தேவை?

பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine