பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது.
புடவையில் உள்ள டிசைன்கள் வெறும் அழகிற்காக என்று நினைப்பது தவறு. அதில் உள்ள டிசைன்களை வைத்தே அதை அணியும் பெண்ணின் அழகு அமைந்துள்ளது.
புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்தினால் மிகச் சிறந்த பெண்மணி என்ற தோற்றத்தை நாம் ஏற்படுத்திவிடலாம். உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும்.
புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.