மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » நலமும் அழகும் » உத‌ட்டு‌‌ச் சாய‌ம் பய‌ன்படு‌த்து‌ம் போது (Lipstick | Beauty Tips)
Feedback Print Bookmark and Share
 
லிப்ஸ்டிக் என்னும் உதட்டு சாயம் 5000 வருடங்களாக பெண்களால் உபயோகப்படுத்தப்படுகிறது! முகத்திற்கு பளிச் சென்ற தோற்றம் தரக்கூடியது லிப்ஸ்டிக்.

சிவப்பு, இளஞ்சிவப்பு, பிரவுன் போன்ற நிறங்களில் கிடைப்பதோடு, கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களிலும் த‌ற்போது ‌வி‌ற்பனை‌யி‌லஉ‌ள்ளது.

மாய்ஸ்சுரைஸர், (இது ஈரப்பதத்தை தக்க வைக்கும்). சன் ஸ்க்ரீன் (வெய்யிலின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்) ஆகியவை உள்ள லிப்ஸ்டிக்கும் கிடைக்கிறது. பார்ப்பதற்கு ஒரு நிறமாகவும், தடவினால் மற்றொர் நிறமாக மாறக்கூடிய லிப்ஸ்டிக்களும் உள்ளன.

லிப்ஸ்டிக்கைத் தடவ லிப் பிரஷ் உபயோகிப்பதே நல்லது. இது சீரான தோற்றத்தைத் தரும்.

உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருள் தான் லிப் க்ளாஸ், இது உதடுகளைப் பளப்பளப்பாகவும் மிருதுவானதாகவும் காட்டும். லிப்ஸ்டிக்கின் மேல் இதைத் தடவலாம். அல்லது லேசான தோற்றம் பெற இதை மட்டுமே தடவலாம். மாய்ஸ்சரைஸர், ஸன்ஸ்கீரின் ஆகியவை உள்ள லிப் க்ளாஸிலும் இப்போது கிடைக்கின்றது.

லிப்ஸ்டிக்கின் மேல் இதைத் தடவும் போது லேசாக தடவ வேண்டும். இல்லையென்றால் லிப்ஸ்டிக் வழிய இதுவே காரணமாகிவிடும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்