துர்நாற்றத்தை முறியடிக்க கைத்தறி பருத்தி மற்றும் கதர் ஆடைகள் உடுத்தவும். இவ்வுடைகளில் காற்று எளிதாக ஊடுருவும். இவை வியர்வை ஏற்படுவதைத் தடுக்கும். ஸின்தெடிக் உடைகளை வெப்பத்தில் அணிவதை தவிர்க்கவும்.
வியர்வை உண்டாக்கும் சுரப்பிகள் முடிகளுக்கு கீழே அதிகமாகக் காணப்படுகின்றன. முடிகளும் வியர்வையை தக்கவைத்து, பாக்டீரியா கிருமியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வெயில் காலத்தில் தலைமுடியை அடிக்கடி ஷாம்ப்பு அல்லது சீயக்காய் போட்டு கழுவவும்.
துர்நாற்றத்தை முறியடிக்க கை இடுக்குகளில் உள்ள முடிகளை அகற்றிவிடுவது சிறந்தது. குளித்த பின் அக்குள் பகுதிகளில் பவுடர் போடலாம்.
உடற்பயிற்சி செய்த பிறகும், வெய்யிலில் அதிக நேரம் சுற்றி திரும்பிய பிறகும், ஆன்டிஸெப்டிக் சோப்பு உபயோகித்து குளிப்பது நல்லது. இது பாக்டீரியவை ஒழித்து துர்நாற்றத்தை விரட்டும்.