தூக்கம் தவிர கருவளையம் அதிகமாக காபி அருந்துவதாலும், புகை பிடிப்பதாலோ, அலர்ஜியாலோ வரலாம். இது தவிர உடலில் தைராய்ட் மற்றும் இரும்பு சத்து குறைவதாலும் ஏற்படலாம்.
கருவளையம் முகத்தின் அழகை குறைப்பதுடன் பொலிவிழக்கவும் செய்கிறது. எனவே அதை சரிபடுத்துவது மிகவும் முக்கியம்.
மேற்கூறிய காரணங்களில் எந்த காரணத்தினால் கருவளையம் வந்தது என்பதை ஓரளவிற்கு நீங்களாகவே கணித்திருப்பீர்கள். காபி அருந்துபவராக இருந்தாலோ, புகை பிடிப்பவராக இருந்தாலோ உடனடியாக அதனை நிறுத்துங்கள்.