முடி உதிர்வதைத் தடுக்க

திங்கள், 5 அக்டோபர் 2009( 16:01 IST )
உடல் சூட்டினாலும் முடி அதிகமாக உதிரும். உடல் சூட்டினைக் குறைத்தால் முடி உதிர்வதையும் குறைக்கலாம்.
வெந்தயம் 1 தேக்கரண்டி, செம்பருத்திப் பூ 5, செம்பருத்தி இலை 5, புங்கங்காய் 3 இவற்றை காய வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை நன்கு அரைத்து தண்ணீரில் குழைத்துக் கொள்ளுங்கள்.
உடல் சூடு அதிகமாக இருப்பதாக நினைத்தால் இந்த விழுதினை தலையில் தேய்த்துக் குளித்தால், உடல் சூடு ஓடிப்போய் குளுமை குடியேறும்.
அவ்வப்போது உங்கள் தலைப் பகுதியை விரல்களால் அழுத்தி மசாஜ் செய்வதாலும் நல்ல பலன் கிடைக்கும்.
முடி உதிர்வதும் குறைந்து விடும்.