முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இன்றைய மங்கை > நலமும் அழகும் > ந‌ல்ல ‌விஷய‌ங்க‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ந‌ல்ல ‌விஷய‌ங்க‌ள்
உங்கள் புருவங்களை குளித்த பிறகு ஷேப் செய்யவும். இல்லையென்றால் வெந்நீரில் நனைத்த துணியை புருவத்தின் மேல் சில நிமிடங்கள் வைக்கவும். இது வலியை குறைத்து புருவத்திலுள்ள முடிகளை எடுப்பதை சுலபமாக்கும்.

காதில் போடும் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.

வெய்யிலில் கருத்த சருமத்தை வெண்மையாக்க ப்ளீச்‌சி‌ங் சிறந்தது. இதோ வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ப்ளீச். பன்னீர், கடலை மாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து உபயோகிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் காலை எழுந்தவுடன் 1 லிட்டர் நீர் பருகுங்கள். நாள் முழுவதும் நிறைய நீர் அருந்துங்கள். இதன் மூலம் உடலில் ஏற்படும் கெட்ட அமிலங்கள் வெளியேற வாய்ப்புண்டு.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
எ‌ண்ணெ‌ய் பசை சரும‌த்‌தி‌ற்கு
முக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றது
முடியை‌ப் பாதுகா‌க்க
அழகான கூ‌ந்தலு‌க்கு ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது
கூ‌ந்தலை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது
பொடுகை ‌விர‌ட்ட