முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இன்றைய மங்கை > நலமும் அழகும் > அழகான கூ‌ந்தலு‌க்கு ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அழகான கூ‌ந்தலு‌க்கு ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது
முடியை சீவுவதற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும்.

முடியின் நுனிப்பாகத்தை விட, வேர்களில் ஹேர் ட்ரையரை நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக் கூடும்.

உங்கள் தலையை நன்றாக மஸாஜ் செய்யுங்கள். கைகளால், முடியை தலையில் தேய்ப்பதற்கு பெயர் மஸாஜ் அல்ல! உங்கள் விரல் நுனிகளால் தலையை மெதுவாக தேய்த்துவிடவும். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உங்கள் முடி நீண்டதாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

நன்றாக மசித்த வாழைப்பழத்தை 15 நிமிடங்கள் முடியில் பூசி வைத்து பின்பு ஷாம்பூவால் அதை கழுவி விடவும். இது உலர்ந்த கூந்தல் இருப்பவருக்கு மிகவும் நல்லது.

ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, கூந்தலில் 10 நிமிடங்களுக்கு தடவி வைக்கவும். பிறகு முடியைக் கழுவவும். இது உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கூ‌ந்தலை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது
பொடுகை ‌விர‌ட்ட
ஒரே ‌சீ‌ப்பு எ‌ல்லோரு‌க்கு‌ம் வே‌ண்டா‌ம்
கூ‌ந்த‌ல் கறுமையாக வளர
ப‌ற்களை பாதுகா‌க்க
உதடுகளை பராம‌ரியு‌‌ங்க‌ள்