உடல் நலத்தைப் பேணிக் காக்க வீட்டிலேயே மருந்து உள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நல்ல பலனைத் தரும்.
கால்களில் ஏற்படும் பித்த வெடிப்பை சரி செய்ய எத்தனையோ பூச்சுக்களை வாங்கி பூசி இருப்பீர்கள்.
ஆனால் கை வைத்தியமாக, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி, ஒரு கைப்பிடி மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பாதத்தில் பத்து போன்று பூசி விடுங்கள். உங்கள் பாதம் எவ்வளவு மிருதுவானது என்று அப்போது உங்களுக்குத் தெரியும்.
குளிர் காலங்களில் தோலில் ஏற்படும் வறட்சியை சமாளிக்கவும் இங்கு வழி உள்ளது.
எளிதுதான். செய்து பாருங்கள் நல்ல பலன் கிட்டும்.
துவரம் பருப்பை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அதனுடன் வெந்நீர் சேர்த்து வறட்சியான இடங்களில் தேய்த்து வந்தால் தோல் பளிச்சென மின்னும்.
தலை முடியை நரையில் இருந்து காத்து, பொடுகை போக்க ஒரு எளிதான வழி இருக்கிறது.
அதாவது, உங்களுக்குத் தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
தேங்காய் எண்ணெய் சூடு சிறிது ஆறியதும் அதில் கொஞ்சம் ஓமத்தைப் போடவும். படபடவென பொரிந்து தள்ளும். பிறகு தேங்காய் எண்ணெயை ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லையும் தீரும். முடியும் கருகருவென வளரும்.
மேலும், தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தலைவலி வரும் என்பவர்களுக்கும் இது ஏற்றது.
கண்கள் எப்போதும் சோர்வாகக் காணப்படுகிறதா? அதனை மாற்ற ஒரு எளிதான வழி இருக்கிறது.
ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்து அதனை ஃபீரிஸரில் வைத்து கட்டியாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் வைத்து வைத்து எடுங்கள். இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கண்களில் காணப்படும் சோர்வு போயே போச்சு.
|