பர்ஸ் கனமாக இல்லையா? பியூட்டி பார்லர் போய் ஹேர் கட் செய்ய யோசிக்கிறீர்களா? அப்படியே பர்ஸ் கனமாக இருந்தும் பார்லர்கள் தலைமுடியை கந்தர்வ கோலமாக்கி பார்க்க சகிக்க முடியாதபடி பண்ணி விடுகின்றன என்று கலைப்படுகிறீர்களா? விடுங்கள் கவலையை உங்கள் கையே உங்களுக்குதவி.
சிலர் நாமே ஹேர்கட் செய்து கொள்ளலாமா என்று யோசிக்கலாம். ஏன் செய்து கொள்ளக்கூடாது.
ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம். நாமே முடி வெட்டிக் கொள்வதால் பணத்தை மிச்சம் செய்யலாம். நன்றாக செய்ய கற்றுக் கொண்டால் ஒரு பார்லர் ஆரம்பித்து பணமும் சம்பாதிக்கலாம்!
தேவைப்படும் பொருட்கள் :-
கண்ணாடிகள் - 2
கத்தரிக்கோல் - 1
சீப்பு - 1
ஆரம்பிக்கலாமா?
முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.
எந்த அளவு வெட்டுவது?
. மொட்டை அடிக்கும் எண்ணம் இல்லை என்றால் தலையில் குறைந்தது 3 அங்குலம் முடியாவது இருக்க வேண்டும்.
. முதல்முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம்.
. சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஆரம்பிக்கவும்.
. இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும்.
. விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு.
. கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும்.
. இதே போல் இந்த காது அறுகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.
. ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம்.
. துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
. `ஸ்டெப் கட்', `மஷ்ரூம் கட்' என்று முதல் முறையே வெட்ட முயற்சித்தால் அதன் விளைவு விபரீதமாகலாம்.
. தைரியசாலிகள் முயற்சித்து பார்த்து ஒரு புது ஸ்டைலை உருவாக்கலாம்!
ஆல் தி பெஸ்ட்!
பின்குறிப்பு :-
முதல் முயற்சிக்குப் பிறகு உங்கள் கணவர் அல்லது குழந்தைகள் சற்றே மிரளலாம் என்றாலும் அடுத்தடுத்த முயற்சிகளில் அசத்திவிடலாம்.
|