உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருள் தான் லிப் க்ளாஸ், இது உதடுகளைப் பளப்பளப்பாகவும் மிருதுவானதாகவும் காட்டும்.
லிப்ஸ்டிக்கின் மேல் இதைத் தடவலாம். அல்லது லேசான தோற்றம் பெற இதை மட்டுமே தடவலாம். மாய்ஸ்சரைஸர், ஸன்ஸ்கீரின் ஆகியவை உள்ள லிப் க்ளாஸிலும் இப்போது கிடைக்கின்றது.
லிப்ஸ்டிக்கின் மேல் இதைத் தடவும் போது லேசாக தடவ வேண்டும். இல்லையென்றால் லிப்ஸ்டிக் வழிய இதுவே காரணமாகிவிடும்.
|