மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » கட்டுரைகள் » நுகர்வோர் உரிமைகள் (Consumer Rights | Costemer Rights | Rights of Consumer | Women Article)
Feedback Print Bookmark and Share
 
webdunia photo
WD
பெரு‌ம்பாலான ‌‌வீடுக‌ளி‌ல் பெ‌ண்க‌ள்தா‌ன் குடு‌ம்ப‌த்தை ‌நி‌ர்வ‌கி‌ப்பவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள். மேலு‌ம், பெரு‌ம்பாலான பொரு‌ட்களவா‌ங்குவது‌ம் பெ‌ண்களாஇரு‌ப்பதா‌ல், வா‌ங்‌கு‌மபொரு‌ட்க‌ள் ‌மீதநம‌க்கு‌ள்உ‌ரிமை, ஒரநுக‌ர்வோராநம‌க்‌கிரு‌க்கு‌ம் ‌உ‌ரிமைக‌ளப‌ற்‌றி ந‌ன்கஅ‌றி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌ம்.

அவ‌ற்றஅ‌றி‌ந்தகொ‌ள்வதம‌ட்டும‌ல்லாம‌லநம‌க்கு‌ததெ‌ரி‌ந்பெ‌ண்களு‌க்கு‌மஅதுப‌ற்‌றிய ‌வி‌ழி‌ப்‌புண‌ர்வஏ‌ற்படு‌‌த்துவது‌மகடமையா‌கிறது.

1.பாதுகாப்பு உரிமை :

உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனையிலிருந்து காக்கப்படும் உரிமை. வாங்கப்படும் பொருள் உடனடி தேவையைப் பூர்த்தி செய்வதோடல்லாமல் நீண்ட நலன்களை நிறைவு செய்வதாகவும் இருக்க வேண்டும்.

பொருட்களை வாங்குவதற்கு முன்பாகப் பொருளின் தரம், சேவை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்குமாறு நுகர்வோர் வற்புறுத்த வேண்டும். அக்மார்க், ஐ-எஸ்-ஐ முதலான தரக் குறியீடுள்ள பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

2. விவரமறியும் உரிமை :

முறையற்ற வியாபாரத்திற்கு எதிராய்த் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருள்களின் தரம் அளவு, திறன், தூய்மை, வரைநிலை, விலை ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கான உரிமை.

ஒரு பொருளைத் தேர்வு செய்வதற்கு அல்லது வாங்க முடிவு செய்வதற்கு முன்பு அப்பொருளைப்பற்றி அல்லது சேவையைப் பற்றி முழு விவரங்களை அளிக்குமாறு நுகர்வோர் வற்புறுத்த வேண்டும். இது அவரைப் பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ளச் செய்யும்.

3. தேர்வு செய்யும் உரிமை :

போட்டி விலைகளில் விற்கப்படும் பலவகைப் பொருட்களை முடிந்தவரை தெளிவாகப் பார்த்துத் தேர்வு செய்யும் உரிமை. ஏகபோக வியாபாரம் என்றால் நியாயமான விலைக்கு திருப்திகரமான தரம், பணி ஆகியவற்றை உறுதி செய்வதற்கான உரிமை.

 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: நுகர்வோர் உரிமைகள்