ஆணுக்கு நிகராய் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் பெண் சமுதாயத்தை இந்த அளவிற்குத் தூக்கிவிட்டது அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள்தான்.
தனது மகளை பட்டப்படிப்பு படிக்கவும், அயல்நாடுகளில் சென்று கல்வி கற்கவும், ஆயக் கலைகளில் எத்தனை முடியுமோ அத்தனையும் கற்கவும் வீட்டு வாயிலை திறந்து விட்ட தாயே உனக்கு சில வார்த்தைகள்...
தற்போது பணிச் சூழலில் பெண் சமுதாயம் உயர்ந்து உயர்ந்து வானில் பறந்து கொண்டிருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் குடும்பச் சூழலில் எத்தனை பெண்கள் வெற்றி பெறுகிறார்கள்.
நல்ல கல்வி அறிவு, கைநிறைய சம்பாதிக்கும் ஆற்றல், வேலை இடத்தில் பெரிய பொறுப்பு எல்லாம் பெற்றிருந்தாலும் வீட்டில் அவள் எத்தனை பொறுப்புகளை நிர்வகிக்கும் திறமையை பெற்றிருக்கிறாள்?
படித்து பணிக்குச் சென்றாலும் அவள் ஒரு இல்லத்தரசியாக வாழ்ந்துதானே ஆக வேண்டும்.
அடிப்படையான எத்தனை வேலைகளை தற்போதைய பெண்களுக்கு அவர்கள் வீட்டில் பழகி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெண்களுக்கு சமைக்கத் தெரிந்திருக்கிறது. சமையல் கட்டு பக்கம் கூட என் பெண் வந்ததில்லை என்று தற்போது பெருமை அடித்துக் கொள்கிறார்கள் அம்மாக்கள். இது சரியா?
ஒரு வீட்டை நிர்வகிக்க வேண்டிய பெண்ணிற்கு அடிப்படை வேலைகளையும், அணுசரித்துப் போகும் பக்குவத்தையும் அன்னைதானே ஊட்டி வளர்க்க வேண்டும்.
|