ஆப்கானிஸ்தானத்தில் கடனை திருப்பி செலுத்த இயலாத விவசாயிகள், கடன் கொடுத்தவர்களுக்கு பெற்ற மகளையே கொடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானத்தில் ஓப்பியம் என்ற போதைப் பொருளை அதிக அளவு விவசாயிகள் பயிர் செய்கின்றனர். இங்கு விளையும் ஓப்பியத்தை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வாங்கிக் கொள்வார்கள். இதிலிருந்து பிரவுன் சுகர், ஹார்ஸ் போன்ற போதைப் பொருளை தயாரிக்கின்றனர். இதை உலக அளவில் கடத்தி சென்று விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடைகின்றார்கள்
இந்த போதை கடத்தல் கும்பல் ஓப்பியத்தை பயிர் செய்ய விவசாயிகளுக்கு கடன் கொடுப்பார்கள். மழை பொய்த்து அல்லது இயற்கை சீற்றத்தால் ஓப்பியம் விளையாமல் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.
விவசாயம் பொய்த்து, வாழ்வதற்கே வழி தெரியாமல் நிர்கதியாய் நிற்கும் இவர்களிடம், கடன் கொடுத்த போதை பொருள் கடத்தல் கும்பல் கடன், வட்டி, வட்டிக்கு குட்டி என்று கொடுத்த ரூபாயை விட பல மடங்கு வசூல் செய்ய படை பரிவாரங்களுடன் வருகின்றனர்.
இவர்களிடம் விவசாயிகள் மழை பொய்த்து போவது, இயற்கை சீற்றம், அரசின் நடவடிக்கை போன்ற காரணங்களினால் ஓப்பியம் பயிர் விளைச்சல் இல்லை என்று உண்மையான காரணத்தை கூறி மன்றாடினாலும் எதுவுமே நடக்காது.
கடனுக்கு பயந்து ஊரை விட்டு, குடும்பத்தை விட்டு ஓடிப்போனால் கூட, போதை கடத்தல் கும்பல் விவசாயிகளை தேடிப்பிடித்து இழுத்து வருகிறது.
ஊர் பஞ்சாயத்து கூடி (கட்டப்பஞ்சாயத்து) கடனுக்கு பதிலாக மகளை போதைக் கும்பலுக்கு தாரை வார்த்து கொடுக்குமாறு தீர்ப்பு கூறுகின்றது.
மனிதாபிமானம் என்பதே சிறிதும் இல்லாத, காட்டுமிரான்டித்தனமான இந்த செய்தி உலக அளவில் பிரபல வார இதழ் நியூஸ்வீக் இதழில் வெளியாகி உள்ளது.
சையத் ஷா என்ற விவசாயி போதை பொருள் கடத்தல் கும்பலிடம் 2 ஆயிரம் டாலரை கடனாக வாங்கினார். இதற்கு பதிலாக 24 கிலோ ஓப்பியம் கொடுப்பதாக ஒப்பந்தம். ஆனால் ஆஃப்கன் அரசு சையத் ஷா பயிரிட்டு இருந்த ஓப்பியத்தை அறுவடை சமயத்தில் முழுவதுமாக அழித்து விட்டது.
கடன்காரருக்கு பயந்து சையத் ஷா குடும்பத்தை நிர்கதியாக விட்டு விட்டு
|