முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மனைவிக்கு கணவனால் இழைக்கப்படும் வன்முறைகள் அதிகரிப்பு!
மணமான இந்திய பெண்களில் 40 சதவீதத்தினர் தங்கள் கணவன்மார்களால் பல்வேறு காரணங்களுக்காக கொடுமை படுத்தப்படுவதாக தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமையலில் குற்றம், பொறாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் இன்னமும் தங்கள் கணவர்களால் வன்முறைக்கு ஆளாவதாக தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

"பெண்கள் கடுமையான உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர், இது புனிதமான அவர்களது இல்லத்திலேயே நடக்கிறது" என்று அந்த ஆணையம் தெரிவிக்கிறது.

இந்த வன்முறை விவரிக்க முடியாத எல்லைகளுக்கு சென்றுள்ளதாயும், இதனால் கடும் இழிவு நிலைக்கு தள்ளப்பட்டதாக உணரும் அப்பெண்கள் கொடுமைகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் தீவிர அச்ச நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மணமான பெண்களுக்கு வீடுகளில் நடக்கும் வன்முறை, இனம், மதம், சாதி, சமூக பிரிவுகள் என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வன்முறைகளைத் தடுக்க நாட்டில் உள்ள பல்வேறு மகளிர் உதவிக் குழுக்கள் போராடி வீட்டு வன்முறையிலிருந்து மகளிரைக் காக்கும் சட்டம் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

பெண்களின் தர உரிமைகளுக்கான போராட்டத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதுடன், தகவல் பரிமாற்ற நடவடிக்கையும் முக்கியம் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதாவது, கொடுக்கப்பட்ட புகார்கள், மானில அரசு இந்த புகார்களுக்கு எடுக்கும் நடவடிக்கை ஆகிய தகவல் பரிமாற்றங்கள் அவசியம் என்று அது வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் மறு மதிப்பீடு செய்யலாம் என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
மேலும்
நா‌ட்டி‌ல் 2 ல‌ட்ச‌ம் செ‌வி‌லிய‌ர் ப‌ற்றா‌க்குறை!
காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
பெண்கள் தொழில்துவங்க மானியம்: உதவி இயக்குனர் தகவல்
கரு‌க்கலை‌‌ப்‌பினா‌ல் 80,000 பெ‌ண்க‌ள் உ‌யி‌ரிழ‌ப்பு!
மு‌ஸ்‌லீ‌ம் பெ‌ண்களு‌க்கு சம அ‌ந்த‌ஸ்‌த்து : ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌ம்!
சிறிய இல்லம் அழகுபடுத்த டிப்ஸ்