முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > கட்டுரைகள்
 
குழ‌ந்தை‌ப் பெ‌ற்ற பெ‌ண்களுக்கு சாதனைகள் கடின‌ம் அ‌ல்ல!
குழ‌ந்தை‌ப்பேற்றுக்குப் பிறகு ‌விளையா‌ட்டில் ஈடுபடு‌ம் பெ‌ண்க‌ள் தங்கள் திறனை ‌சிற‌ப்பாக வெளிப்படுத்தவு‌ம், குழ‌‌ந்தை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் அ‌திக மனபல‌த்தை‌க் கொ‌ண்டிரு‌ப்பதாகவு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

சை‌ட்மா மரு‌த்துவ ப‌ல்கலை‌க் கழக மரு‌த்துவமனை‌யி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் பெ‌ண்க‌‌ள் நோ‌ய் மற்றும் மக‌ப்பேறு மரு‌த்துவ ‌நிபுண‌ர்அ‌கீரா ந‌ம்பா, குழ‌ந்தை பெ‌ற்றெடு‌த்த‌ பெ‌ண்க‌ளி‌ன் ‌‌வீ‌ங்‌கிய அ‌ல்லது உ‌ப்‌பிய மா‌ர்பக‌ங்க‌ள், அடி வ‌யி‌ற்று எலு‌ம்பு, இடு‌ப்பு‌க் கூ‌ட்டு எலு‌ம்பு ஆ‌கியவையு‌ம், அறுவை ‌சி‌கி‌ச்சை (சிசேரியன்) மூல‌ம் குழ‌ந்தை பெ‌ற்ற ‌நிலை‌யி‌ல் பெ‌ண்களு‌க்கு அடிவ‌யி‌ற்று தசை‌ப் பகு‌திக‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப் ப‌ட்டிரு‌க்கு‌ம். இது விளையா‌ட்டு‌ வீராங்கனைகளாகத் திகழும் பெ‌ண்க‌ளு‌க்கு உட‌ல் க‌ட்டு‌க்கோ‌ப்பையு‌ம், சம‌நிலையையு‌ம் பா‌தி‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

தா‌ய்‌ப்பா‌‌ல் கொடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் காலத்தில் முழு‌வீ‌ச்‌சிலான உட‌ற்ப‌யி‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ள்ளுவது ச‌ற்று கடினமானது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர். அதே நேர‌த்‌தி‌ல் த‌ற்போது உ‌ள்ள ந‌வீன ப‌‌யி‌ற்‌சி முறைகளு‌ம், வள‌ர்‌ச்‌சியடை‌ந்துள்ள அ‌றி‌விய‌ல் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு‌ம், குழ‌ந்தை பெ‌ற்றெடு‌த்த ‌வீரா‌ங்கனைக‌‌ள் த‌ங்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனைக‌ளி‌ல் இரு‌ந்து ‌விடுபட உதவு‌கிறது.

மேலு‌ம் அவ‌ர்க‌ளி‌ன் ‌விளையா‌ட்டு தொட‌ர்பான ச‌க்‌தியை‌ப் பெற, உட‌லி‌ல் சுரக்கும் ஆ‌ண்டோரஜ‌ன்களு‌ம், ம‌ற்ற ஹா‌ர்மோ‌ன்களு‌ம் பெ‌ண்களு‌க்கு உதவு‌கி‌ன்றன.

இ‌ந்த ‌வீராங்கனைக‌‌ளு‌க்கு குழ‌ந்தையை‌ப் பெ‌ற்றெடு‌த்த ‌பி‌ன்ன‌ர் இய‌ல்பு ‌‌நிலை‌க்கு ‌திரு‌ம்புவதற்கும், த‌ங்க‌ளி‌ன் ‌திறமை குறையாத வ‌ண்ண‌ம் இரு‌ப்பது எ‌ப்படி எ‌ன்பதை தெ‌ரி‌ந்தும் உள்ளன‌ர் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர். பேறுகால‌த்‌தி‌ற்கு ‌பி‌ந்தைய சோதனைக‌ளி‌ல் அவ‌ர்க‌ளி‌ன் தசை, ம‌ற்ற ‌விளையா‌ட்டு தகு‌திக‌ள் அ‌திக‌ரி‌த்ததாக தெ‌ரிய‌வி‌ல்லை. ஆயீனும் மனோ‌ரீ‌தியாக பு‌திய குழ‌ந்தை வரவு புது‌த்தெ‌ம்பை அவ‌ர்களு‌க்கு‌ள் உருவா‌க்குவது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

இத‌ற்கு உதாரணமாக கட‌ந்த 2007 ஜனவ‌‌ரி மாத‌ம் குழ‌‌ந்தை‌ப் பெ‌ற்ற பவுலாரேட்‌கி‌ளிஃ‌ப்‌பி அதே ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் மாத‌ம் நடை‌ப்பெ‌ற்ற ‌நியூயா‌ர்‌க் மார‌த்தா‌ன் போ‌ட்டி‌யி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றதையு‌ம், குழ‌ந்தையை‌ப் பெ‌ற்றெடு‌த்ததை‌த் தொட‌ர்‌ந்து ஆக‌ஸ்‌ட் மாத‌ம் ஒசாகா‌வி‌ல் நடை‌பெ‌ற்ற ச‌ர்வதேச 400 ‌மீ‌ட்ட‌ர் தடகள போ‌ட்டி‌யி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்ற ஜானா-ரா‌வ்‌லீ‌‌ன்-ச‌ன் ஆ‌கியோரை சு‌ட்டி‌க் கா‌ட்டு‌‌கிறா‌ர் மரு‌த்துவ‌ர் அ‌கீரா ந‌ம்பா.

மேலும்
பெ‌ண்களை‌விட ஆ‌ண்களே அ‌திக‌ம் பேசு‌கி‌ன்றன‌ர் : ஆ‌ய்வு!
கருவு‌ற்ற பெ‌ண்க‌ள் ஒ‌‌‌யி‌ன் குடி‌க்கலா‌ம் : ஆ‌ய்‌வு!
தாயை ‌நினைவுபடு‌த்து‌ம் சோ‌ப்பு வாசனை!
லிம்கா சாதனைக்காக 1170 பதாகைகள்
கர்ப்பிணிகள் போன் செய்தால் ஆம்புலன்ஸ்
மாதர் குல மாணிக்கம் மதர் தெரேசா!