கருவுற்ற பெண்கள் சிறிதளவு ஒயின் குடிக்கலாம் என்று லண்டனச் சேர்ந்த உடல்நல, மருத்துவ ஆய்வு மையத்தின் (NICE) ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்கள் முற்றிலும் மது குடிக்கக் கூடாது என்பது தவறான கொள்கையாகும். அவர்கள் நாள் ஒன்றுக்கு 1.5 யூனிட்டிற்கு மேல் மது குடிக்கக் கூடாது என்பதே உண்மை என்று NICE அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருவுற்றபோது மது குடிக்கலாமா என்பது பற்றி நடத்தப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளை NICE ஆலோசகர்கள் விரிவாகப் படித்து விவாதித்தனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்திய ஆய்வுகளும் அடக்கம்.
ஆல்கஹால் குழந்தை பிறப்பைச் சிக்கலாக்கும். ஆனால் குறைந்த அளவு ஆல்கஹால் பிறக்கப் போகும் குழந்தையை பாதிக்காது என்று தெரிவித்தனர்.
கருவுற்ற பெண்கள் தங்கள் ஆசையைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தால் நாள் ஒன்றுக்கு 1.5 யூனிட் ஒயின் குடிக்கலாம். அதுவும் முதல் மூன்று மாதங்களுக்கு மதுவைத் தொடாமல் இருப்பது நல்லது என்று NICE தெரிவித்துள்ளது.
இருந்தாலும், கருவுற்ற பெண்கள் மது குடிக்கக் கூடாது என்ற நலத்துறையின் விதிமுறைகளுக்கு இது முரணானது ஆகும்.
இதுகுறித்து, லண்டன் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பெண்கள் நலத்துறை மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் கூறுகையில்,'' எங்களிடம் உள்ள குறிப்புகளுடன் NICE தந்துள்ள அறிக்கை ஒத்துப் போகிறது என்று நான் நினைக்கிறேன். மது குடிப்பதை முற்றிலும் தடுப்பது நல்லதல்ல'' என்றார்.
இந்த ஆய்வு முடிவிற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற ராயல் மருத்துவமனை வல்லுநர்கள், கருவுற்ற பெண்கள் பாதுகாப்பாக இருப்பதே நல்லது என்று கூறியுள்ளனர்.
ஆல்கஹாலைத் தவிருங்கள் என்றால் சிக்கலைத் தவிருங்கள் என்று அர்த்தம். எனவே கருவுற்ற பெண்கள் மது குடிக்கக் கூடாது என்நு குழந்தை மருத்துவ வல்லுநர் ஆண்ட்ரூ செனான் கூறியுள்ளார்.
|