முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  கட்டுரைகள்
 
காந்தியப் பார்வையில் இந்திய மண்ணும் பெண்ணின் உரிமையும்
Webdunia
இருபதாம் நூற்றாண்டு மக்கள் நூற்றாண்டு எனப் புகழப்படுகிறது. ஆனால் இம்மக்கள் கூட்டத்தில் பெண்கள் எங்கே இருக்கிறார்கள்? இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் நின்று கொண்டிருக்கும் போது சற்றுப் பின் நோக்கிப் பார்த்தால் அதிகாரப் படுத்துவதிலும் சமூக பொருளியல் மேம்பாட்டிலும் பெண்கள் உண்மையில் எங்கு இருக்கிறார்கள் என்ற கேள்வியை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டு கால முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மேலோட்டமாகப் பார்த்தாலும் நிலவும் சமுதாய நிலைமையின் முதன்மையான பகுதி இந்திய சமூக அமைப்பு மதிப்புகள் ஆண்களை மையமாக வைத்து இயங்குவதும் பெண்கள் இந்த மதிப்புகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுவதும் தான் என்பதைக் காட்டும்

பெண்களைக் கேவலப்படுத்தும் வழக்கமும் அவர்களின் திறமைகளைக் குறைவாக மதிப்பிடுவதும் தொடருகிறது. நெடுஞ்சாலையில் சுங்க வரிகட்டி விட்டுச் செல்வது போல் பொது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பெண்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது என்பதற்கு அடையாளமாக சில சலுகைகள் தரப்படுவது வழக்கமாகி விட்டது. இருந்தாலும் ஆண், பெண் வேறுபடுத்துதலுக்கு எதிராக 20 ஆம் நுற்றண்டில் மிகக் கடுமையாகப் போராடிய பின்னும் கூட தேவையான சலுகைகள் சிறிதளவும் பெண்களுக்குக் கிடைக்க வில்லை.

நாம் வழிகாட்டுதலுக்கு மகாத்மா காந்தியிடம் செல்ல வேண்டும். ஏனென்றல் பெண்களை அதிகாரப்படுத்துதல் என்ற இலக்கை அடைவதற்கான பாதையை அவர் நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். காந்தி என்றென்றும் பெண்ணினத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு கொண்டவர். "பெண்கள் தங்கள் சங்கிலிகளை அணிகலன்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இருந்து பெண்களை விடுவிக்கத் தீவிர எண்ணங்களைக் கொண்டுள்ளேன். என் ஆராய்ச்சிகள் முடிவடைந்த பின் ஒரு நாள் என் முடிவுகளில் சிலவற்றைப் பொதுமக்களின் முன் வைப்பேன் என நம்புகிறேன். பெண்களின் உண்மையான முன்னேற்றம் அவர்களின் சொந்த முயற்சியின் மூலம் தான் வர முடியும் என்பதை என் அனுபவம் எனக்கு உறுதிப் படுத்தியுள்ளது" என்கிறார் காந்தி.

பெண்களை மதிக்கும் பண்பு

தன் தாயும் மனைவியும் 19ஆம் நுற்றாண்டு குசராத்தியக் குடும்பங்களின் சுரண்டல்களை அமைதியாக எப்படி எதிர்த்து நின்றார்கள் என்பதைக் காந்தி கவனிக்கத் தவறவில்லை. அவர்களிடம் இருந்து அறப்போராட்ட முறையைக் கற்றுக் கொண்டார். ஆங்கிலேயரின் சுரண்டல்களை எதிர்த்துப் போராடும் போது அவர்களின் வலிமையைப் பணிய வைக்க இந்த ஆயுதத்தை நன்றாகப் பயன்படுத்தினார். அவர் தன் வாழ்க்கையில் பின்னாளில் வெளிப்படுத்திய பெண்களை மதிக்கும் பண்பும் அவர்களின் சிக்கல்களைப் புரிந்துக் கொள்ளும் தன்மையும் அவர் தன் தாயிடமும் மனைவியிடமும் இருந்து பெற்றது தான்.

கஸ்தூரிபாய் காந்தி இருவரும் இறுதியாக சிறை வைக்கப்பட்டது பூனாவில் உள்ள ஆகாகான் அரண்மனையில் தான். இங்கு காந்தி கஸ்தூரிபாய் அவர்களுக்கு ஆசிரியராகவும் அன்புக் கணவராகவும் இருந்தார். காந்தியின் பெண்ணியம் அவரது சொந்தப் பெண்ணியமாக இருந்தாலும் அதில் ஒரு பங்கு எவ்வளவு சிறிதாக இருப்பினும் அது அவரது மனைவியிடம் இருந்து பெற்றது தான். தன் மனைவிக்குத் தான் கடமைப் பட்டிருப்பதை ஒப்புக் கொள்பவராக அவர் இருந்தார். காந்திக்கு பெண் என்றும் மனைவி என்றும் விளங்கிய கஸ்தூரிபாய் போகப் போக ஓர் இந்தியப் பெண்ணாகத் தெரிந்தார்.

காந்தியின் அணுகுமுறை

பெண்களைப் பற்றிய காந்தியின் அணுகுமுறை அவரது மனிதத் தன்மையின் ஒரு பகுதியாக அல்லது ஓர் ஆணின் விட்டுக் கொடுத்தல் உடன்பாடாகத் தான் காட்டப்படுகிறது. அவரது தலைமுறையில் பரவலாக நிலவிய பெண்களின் பங்களிப்பு பற்றிய குறுகிய எண்ணங்களை உண்மையில் அவை போக்குபவைகளாக இல்லை. பெண்களைப் பற்றிய காந்தியின் கருத்துகளும் அவை புரட்சிக்கு ஆற்றிய பங்களிப்பு ஆகியவை உண்மையான ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்படவில்லை என்பது நமது கருத்து. காலப் போக்கில் உருவான காந்தியின் கருத்துகளைப் பற்றியும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அரசியலின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலினால் அவரது நிலைபாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றியும் மேற்கூறிய கருத்துகள் ஆராயவில்லை.


முயற்சியை என்றும் கைவிடவில்லை

உண்மை, அறவழி, கடவுள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் போது கூட காந்தி எப்போதும் எதையும் யாரையும் ஏற்றுக் கொள்ளாதவராய் இருந்தார். காந்தி தாம் பிறந்த போது பார்த்த உலகத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் உலகத்தை உலுக்கினார். தம்முடைய வாழ்நாள் முழுவதும் அதை மாற்றி அமைக்கப் பாடுபட்டார். அவர் இந்த முயற்சியை என்றும் கைவிடவில்லை.

உலகத்தை மாற்றி அமைக்கும் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது தொடர வேண்டும் இது முடிவற்றது முதல் மனிதனிடம் இருந்து இந்த முயற்சி தொடங்கியது. நல்ல முறையில் ஒருங்கிணைக்கப் பெற்ற தன்னிறைவுடைய ஒரு சிந்தனை முறைமையை உருவாக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியான படிப்படியான வளர்ச்சிப் பாதையில் சென்றார். இதை அவர் தம்முடைய "சத்தியசோதனை" என்னும் புதிய அனுபவங்களின் வெளிச்சத்தில் தனது எண்ணங்களை திருத்திக் கொள்ளுதல் மாற்றிக் கொள்ளுதல் விரிவாக்குதல் என்றும் கூறினார்.

பெண்களுக்குப் புத்துயிர் கொடுப்பது என்பது அவரது செயல் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே அவர் தனது திட்டங்களில் பெண்களுக்காக தனிக்கவனம் செலுத்தினார்.

காந்தியின் முயற்சி அவரைப் பெண்களுக்கு மிகவும் வேண்டியவராக ஆக்கியது இந்தியப் பெண்களை அவருடைய வேண்டுகோளுக்குச் சிறப்பான முறையில் செயல் பட வைத்தது. இவர்களில் பல பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தங்களுடைய குடும்பங்களை பெற்றோர்களை கணவர்களை எதிர்க்க வேண்டியிருந்தது.

1| 2
மேலும்
பஞ்சாபில் பெண்சிசுகொலை கொடூரம்
ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் நீக்க சில வழிகள்
பெண்களுக்கான புதிய சட்டம் உதவுமா?
மனம் வேண்டும் மரம் வைக்க
…ஈவ் டீஸிங்
புகழ்பெற்ற தோழிகள்