முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  கட்டுரைகள்
 
ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் நீக்க சில வழிகள்
Webdunia
இன்றைய துரித வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் நம்மில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அதிக வேலை, தூக்கமின்மை, துரித உணவு என்று வாழ்க்கை ஓட இதில் முதலில் அடிபடுவது மனம் தான்.

மனதிற்கும் உடலுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் எஎன்பவை எல்லாம் மன அழுத்ததின் எதிரொலிகள் தான்.

நமக்கு உள்ள கடமைகளையும் செய்து கொண்டு அதே சமயம் மன அமைதியும் இழக்காமல் இருப்பதற்கான சில வழிமுறைகள் இதோ....

* அதிக வேலைப்பளு காரணமாய் ஸ்ட்ரெஸ் ஏற்படும். அதனால் டென்ஷன் வந்து விடும். இதற்கு நேரத்தை திட்டமிடுதல் அவசியம். ப்ளான் செய்து கொண்டு வேலைகளை முடித்தால் மன இறுக்கம், அழுத்தம் ஆகியவை அண்டாது.

* கஷ்டமான சூழ்நிலைகளிலும் ரிலாக்ஸ்டாக இருந்து விட்டால் டிப்ரஷன் வர வாய்ப்பு இல்லை. எதையுமே அதன் போக்கில் எடுத்துக் கொண்டு சிரிப்பும் உற்சாகமுமாய் இருப்பவர்களுக்கு டிப்ரஷன் வருவதில்லை.

* மனம் விட்டு பேசுதல் எதற்குமே வடிகால் எனலாம். ஆத்ம நண்பர்களிடம் மனம் விட்டு பிரச்சினையை பேசி முடிக்கும் போது ஏதோ பாரத்தை இறக்கி வைத்த உணர்வு ஏற்படும். எதையுமே பகிர்ந்து கொள்ளுதல் நன்மையில் முடியும்.

* தூக்கமின்மையும் டிப்ரஷனுக்குக் காரணமாகலாம். இதற்கு சீக்கிரமே இரவு படுத்து விடியலில் எழும் பழக்கத்தை மேற்கொண்டால் புத்துணர்ச்சி ஏற்படும்.

* நல்ல இசை மனதுக்கு இனிய இயற்கை காட்சிகள் முதலியன மன இறுக்கத்தை தளர்த்தும்.

* உடற்பயிற்சி அல்லது யோகா மிகவும் நல்லது. வேகமான நடைப்பயிற்சி உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல மனதுக்கும் தான். ப்ராணாயாமம் எனும் மூச்சுக்காற்றை இழுத்து விடும் பயிற்சியில் பெருமளவு மன இறுக்கம் குறைவது உறுதி.

* சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்கள் மன இறுக்கத்திற்குக் காரணமாகும். அவைகள் இல்லா விட்டால் உயிரே போய் விட்டாற் போலிருப்பவர்கள் அந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்த முடியாவிட்டாலும் சற்று குறைப்பது நல்லது ஏனெனில் சிகரெட்டும் மதுவும் மன இறுக்கம் விளைவிக்கும் ஹார்மோன்களோடு தொடர்பு கொண்டவைகள்.

* உடலுக்கும் தலைக்கும் மசாஜ் செய்து கொள்வது நல்ல வாசைன திரவியங்களை முகர்வது இவையெல்லாமும் மன இறுக்கத்தை குறைக்கும் என்கிறார்கள்.

மேலும்
பெண்களுக்கான புதிய சட்டம் உதவுமா?
மனம் வேண்டும் மரம் வைக்க
…ஈவ் டீஸிங்
புகழ்பெற்ற தோழிகள்
கல்லூரிகளில், பள்ளிகளில் நடக்கும் கொடுமை
“அய்யோ! தாங்க முடியலே....”