முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  கட்டுரைகள்
 
மனம் வேண்டும் மரம் வைக்க
Webdunia
ஹூப்ளியில் உள்ள மகந்தேஷ் தபாஷெட்டி எனும் டாக்டர் வறண்டு கிடக்கும் ஹூப்ளியை பசுமைப்படுத்த தனிமனிதனாக ஒரு முயற்சியை துவக்கினார்.

தொழிலில் மிகவும் ஆழ்ந்த வேலைகள் இருப்பினும் டாக்டர் தொழிலையும் கவனித்துக் கொண்டு நாட்டுக்கான தனது முயற்சியையும் அவர் செய்தார். தினமும் ஒரு மணி நேரம் நாட்டுக்காக ஒதுக்கினார். தனது காரில் மரக்கன்றுகளை ஏற்றிக் கொண்டு நகரெங்கும் வலம் வந்து மரக்கன்றுகளை நடுவார். ஏற்கனவே தான் நட்ட கன்றுகளுக்கு நீர் ஊற்றுவார்.

வருடா வருடம் ஆயிரம் மரங்களை நடுவது இவரது திட்டம். கடந்த 12 வருடங்களாக இச்சேவையை தனி மனிதராக செய்து வரும் இவர் இது வரை 12 000 மரங்களை ஹூப்ளியெங்கும் நட்டு, நகரையே பசுமைப்படுத்தி விட்டார்.

ஹூப்ளி நகர பேருந்து நிலையத்தை முன்பு வெயில் சுட்டெரித்தது. இவர் அங்கே மட்டும் 1500 மரக்கன்றுகளை நட்டார். இப்போது அவை மிக அருமையாக வளர்ந்து நிற்கின்றன.

ஜோஷி இங்கிலிஷ் மீடியம் ஸ்கூல் பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் இருக்கிறது. அங்கேயும் மிகவும் கஷ்டப்பட்டு 25 மரக்கன்றுகளை நட்டார் மகந்தேஷ். இப்போது அவை நன்கு வளர்ந்து மாணவர்களுக்கு நிழல் தருகின்றன. சென்ட்ரல் கல்லூரி அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் நட்ட மரக்கன்றுகள் பல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், காதலர்களுக்கும் நிழல் தருகின்றன.

மரம் நடுவது ஒரு புறம், அத்துடன் மரம் வெட்டுதலையும் முடிந்த வரை தடுக்கிறார் டாக்டர் மகந்தேஷ். கிம்ஸ் மெடிக்கல் கல்லூரியில் 30 வருடங்களாக மரங்களை ட்ரிம் செய்து வந்தனர். மகந்தேஷ் அங்கு சென்று பேசி அதை தடுத்து நிறுத்தி, இப்போது அந்த மரங்கள் வானுயர வளர்ந்து நிற்கின்றன.

சந்தோஷ் நகர் ஏரி நீர் இதே போல் மாசுபட்டு நின்றது. அதை சுற்றி பலர் குடிசை போட்டு ஏரியை ஆக்கிரமித்திருந்தனர். மாநகராட்சி உதவியுடன் ஆகிரமிப்பாளர்களை அகற்றி விட்டு ஏரி சுற்றிலும் மரங்களை நட்டார் மகந்தேஷ். இப்போது தண்ணீர் மிகவும் சுத்தமாகி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.

சந்தோஷ் நகர் ஏரியில் மரங்களை வளர்ப்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது. 14 மாதங்களுக்கு தொடர்ந்து மழையே பெய்யவில்லை. சொந்த காசை போட்டு, டேங்கர் லாரியில் நீரை வரவழைத்து மரங்களுக்கு ஊற்றினார் டாக்டர் மகந்தேஷ்.

சில சமயங்களில் கோடாக்கள் எனும் பானையில் அவரே தண்ணீரை சுமந்து சென்று மரங்களுக்கு ஊற்றுவார். இப்போது அந்தப் பகுதியில் பசுமை தாண்டவமாடுகிறது. இவரது முயற்சிகளுக்கு வனத்துறையும் அருமையாக உதவி செய்கிறது. விரைவில் வளரக்கூடிய மரக்கன்றுகளை தந்து உதவுகிறது வனத்துறை.

காரில் அடிக்கடி நகரை சுற்றி வந்து எங்கே மரம் நடலாம் என்று பார்த்துக் கொண்டே இருப்பாராம். இவரது காரில் எப்போதும் மரக்கன்றுகள், வாளிகள் ஆகியவை இருக்கும்.

இவரது முயற்சிகளுக்கு சில நகர மக்கள் உதவி செய்வதில்லை. "எங்கள் வீடுகளுக்கு முன் மரம் நடாதே" என சிலர் சண்டைக்கு வருவதும் உண்டு.அப்படிப்பட்ட இடங்களில் இவர் மரம் நடுவதில்லை. "நட்டு வைத்த பின் மரத்தை அவர்கள் வெட்டிவிட்டால் என்ன செய்வது?" என்கிறார் டாக்டர் மகந்தேஷ்.

12 வருடங்களில் 12000 மரங்கள் நட்ட இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் நூறாயிரம் மரங்கள் நாட்டுக்கு கிடைக்கும். அதே நேரம் நம்மில் பலரும் அவரைப் போல உற்சாகமாய் இப்பணி செய்ய முன் வருவோம்.

மனம் இருந்தால் மரம் வைக்கலாம்!
மேலும்
…ஈவ் டீஸிங்
புகழ்பெற்ற தோழிகள்
கல்லூரிகளில், பள்ளிகளில் நடக்கும் கொடுமை
“அய்யோ! தாங்க முடியலே....”
சிறந்த பிரம்மச்சாரியை அறிய உதவும் வழிகாட்டி
துன்புறுத்தலுக்கு அஞ்ச வேண்டாம் !