முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  கட்டுரைகள்
 
“அய்யோ! தாங்க முடியலே....”
Webdunia
கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நடக்கும் கொடுமைகளைப்பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம். அதைப் படித்து விட்டு பல மாணவ மாணவிகள் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதி அனுப்பினர். அதிலிருந்து மனதை உருக வைக்கும் சில அனுபவங்களை கீழே கொடுத்துள்ளோம்.

ஹலோ, என் பெயர் ராஜேஷ். நான் +2 படிக்கும் மாணவன். என்னுடன் படிக்கும் மாணவர்கள் 4 பேர் என்னை தினமும் பலவிதத்தில் கஷ்டப்படுத்துறாங்க. என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறாங்க. என் டிபன் பாக்ஸிலிருக்கும் டிபனை கீழே கொட்டிடுறாங்க. ஸ்கூலில் நடக்கும் போது என்னை தள்ளிவிடுறாங்க. அடுத்து அவர்கள் என்ன செய்வாங்களோ என்ற பயத்திலேயே எனக்கு படிப்பிலிருந்த கவனம் போயிடிச்சு. இதையெல்லாம் தாங்க முடியாமல் போன வாரம் அந்த 4 பேரில் ஒருவனை நான் அடிசிட்டேன். ஸ்கூல்ல என்னை ஒரு வாரம் ஸஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. வீட்டிலேயும் எனக்கு திட்டு விழுது. நான் +2 எக்ஸாம் பாஸாக மாட்டேன் என்று பயமா இருக்கு.

உங்க ஆர்டிகிள் படிச்சேன். என் காலேஜ்ல அழகா ஃபேஷனா கர்ல்ஸ் டிரெஸ் பண்ணுறாங்க.என் குடும்பத்திலே வசதி இல்லை. அதுவும் நான் ஸ்காலர்ஷிப் ஸ்டூடண்ட். அதனால் நான் சாதாரணமான டிரெஸ் தான் போடுவேன். என்னை யாரும் அவங்களோட குரூப்ல சேரவிடமாட்டேன்றாங்க. நீ எங்களோட வெளியில வந்தா மத்தவங்க பிச்சைதான் போடுவாங்கன்னு ஒரு பொண்ணு சொன்னா. நான் அழுதுட்டேன்.

என் பெயர் ப்ரியா. நான் பி.ஏ. முதல் ஆண்டு படிக்கிறேன். நான் கொஞ்சம் குண்டு. என் காலேஜ்ல எல்லோரும் என்னை யானைன்னு கூப்பிடுறாங்க. இது எனக்கு கஷ்டமா இருக்கு. அதிலேயும் என் க்லாஸ்லெ படிக்கிற 3 கர்ல்ஸ் என்னை தினமும் ரொம்ப கேலி செய்றாங்க. கடவுள் என்னை ஏன் இப்படி படைச்சான்னு தினமும் அழுகையா வருது. எனக்கு படிக்கனும், எம்.பி.ஏ பண்ணனும் என்ற ஆசையெல்லாம் இப்போ இல்லே. காலேஜுக்கு போகவே இஷ்டமில்லே. உடம்பு சரியில்லே, காலேஜ் லீவ் இப்படி ஏதாவது சாக்கு சொல்லிட்டு நான் வீட்டிலேயே இருக்கேன்.

இந்த மாதிரி கொடுமைகள் படிக்கும் போது மட்டுமில்லே வேலைக்குப் போகும் இடத்திலேயும் நடக்குது. எனக்கு வயது 21. நான் ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து படிச்சேன். சிட்டி பசங்க என்னை காலேஜ்ல படிக்கும் போதே ரொம்ப கஷ்டப்படுத்தினாங்க. இப்போ வேலையில சேர்ந்த பிறகும் இந்த கஷ்டம் தீரலே. எனக்கு இங்கிலீஷ் சரியா பேச வராது. இந்த சிட்டி பசங்க என்னை இங்கிலீஷ்ல திட்டுறாங்க. ஒரு நாள் எனக்கு ஒரு கெட்ட வார்த்தை சொல்லிகொடுத்து என் ஆஃபீஸ்ல இருக்கும் மேடம் கிட்டே சொல்ல சொன்னாங்க. நானும் தெரியாம சொல்லி அவங்க என்னைப்பத்தி மேனேஜெர் கிட்டே புகார் பண்ணிட்டாங்க. இதனால எல்லாரும் அதிகமா கிண்டல் பண்றாங்க. குடும்பத்துல கஷ்டம். வேலையைவிட முடியலே. என்னாலேயும் தாங்க முடியலே.
மேலும்
சிறந்த பிரம்மச்சாரியை அறிய உதவும் வழிகாட்டி
துன்புறுத்தலுக்கு அஞ்ச வேண்டாம் !
டீன் ஏஜில் மனப்புழக்கம் - பெற்றோர் காரணம்?