பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்தி கையில் எடுத்த ஆயுதம் சாதாரண நூல் நூற்கும் ராட்டை. துப்பாக்கிகள் சாதிக்க தவறியதை ராட்டை சாதித்தது. ஆம் பிரிட்டிசார் இந்தியாவை விட்டு வெளியேற ராட்டையும் காரணமாக இருந்தது.
காந்தியின் மற்றொரு குறிப்பிடத்தக்க போராட்டம் அந்நிய துணி பகிஷ்கரிப்பு. இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சை வாங்கி, பிரிட்டிசார் அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். |