முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ந‌ட்பு ‌தின‌ம் > கண்ணன் - குசேலன் நட்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கண்ணன் - குசேலன் நட்பு Search similar articles
- கி. பாலசுப்ரமணியன்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு - திருக்குறள்

உலகில் தாய் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன் காட்டும் தூய்மையான அன்புதான். அன்று முதல் இன்று வரை நட்பு விலைமதிப்பற்ற சொத்தாக போற்றப்பட்டு வருகிறது.

அன்னையர் தினம், மகளிர் தினம், குழந்தைகள் தினம் என்று பல்வேறு தினங்களை நாம் போற்றி வருகிறோம். அந்த வகையில் நண்பர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை 'நண்பர்கள் தின'மாக கடைபிடித்து வருகிறோம்.

தோழமைக்கு இலக்கணமாக பல்வேறு சாண்றோர்களின் நட்பை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். 'நட்பு' என்றாலே நம் நினைவுக்கு 'கண்ணன் - குசேலன்' நட்பு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அழகிய கோவர்த்தன மலைப்பகுதி காடுகளில், சிறுவனான ஆயர்குலக் கண்ணன் தனது கால்நடைகளை மேய்த்து வந்தான். மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் கண்ணன் தனது நண்பர்களுடன் புரியும் சேஷ்டைகளுக்கு அளவே இருக்காது. தனது தலையில் மையிற்பீலி (மயிலிறகு) செருகிக் கொண்டு புல்லாங்குழலை வாசித்து, நண்பர்களை மகிழ்வித்தான்.

கண்ணனின் லீலைகள் ஏழை அந்த சிறுவனான குசேலனை மிகவும் கவர்ந்தது. கண்ணனை சற்று தூரத்தில் தனியாக நின்று தினசரி வேடிக்கை பார்த்து வந்தான். ஒருநாள் குசேலனைப் பார்த்த கண்ணன், தங்களுடன் விளையாட வரும்படி அழைத்தான். ஆனால் குசேலனுக்கோ மிகுந்த தயக்கம். பெருங்கூட்டத்தின் தலைவனான ஆயர்ப்பாடி கண்ணன், வறியவனான தன்னை மதிப்பானா என்று.

ஆனால், நட்புக்கு ஏழ்மை தெரியுமா? இவ்வாறு தா‌ன் கண்ணன் - குசேலன் நட்பு மலர்ந்தது. கள்ளமில்லாத இருவரின் நட்பை தெய்வத்திற்கு இணையானதாக ஊரார் போற்றினர்.

ஆண்டுகள் பல சென்றன. கண்ணன், குசேலன் இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கத் தொடங்கினர். இருவரும் தொடர்பின்றி இருந்தனர். இப்போது மண வாழ்க்கையின் பயனாக குசேலனுக்கு ஏழு, எட்டு குழந்தைகள்.
1 | 2  >>