மாதங்களில் சித்திரைக்கு என்று தனிச் சிறப்புகள் உண்டு. தமிழ் புத்தாண்டு என்ற மாபெரும் சிறப்பு இனி சித்திரைக்கு இல்லாமல் போனாலும், அந்த மாதத்தின் அனைத்து நாட்களுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவை என்றால் மிகையல்ல.
இந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சித்திரை பிறந்து மே 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மொத்தம் 31 நாட்களை கொண்ட இந்த சித்திரை முழுவதும் பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கின்றன.
எந்தெந்த நாளில் என்னென்ன சிறப்பு என்பது பற்றிய ஒரு தொகுப்பு இதோ:
சித்திரை 1 - (ஏப். 13):
தமிழ் புத்தாண்டு. பாபநாசம் சிவன் கோயில் தெப்பத் திருவிழா, திருச்சி உச்சிப் பிள்ளையார் பாலாபிஷேகம், விஷூ புண்ய காலம், அஷ்டமி, அரசு விடுமுறை.
சித்திரை 2 - (ஏப்.14):
டாக்டர். அம்பேத்கர் பிறந்ததினம், ஸ்ரீராம ஜெயந்தி, கும்பகோணம் ராமர் கோயில் தேர் திருவிழா, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் புறப்பாடு, நவமி, அரசு விடுமுறை.
சித்திரை 3 - (ஏப்.15):
தர்மராஜ தசமி, வீரபாண்டி கவுமாரியம்மன் உத்சவம் ஆரம்பம், சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா, மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வாகனத்தில் புறப்படுதல்.
சித்திரை 4 - (ஏப்.16):
ஏகாதசி, மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம், திருச்சி தாயுமானவர் சீர்காழியில் திருக்கல்யாணம், சுப முகூர்த்த நாள்.
சித்திரை 5- (ஏப்.17):
துவாதசி, பிரதோஷம், திருப்பணந்தாள் அருண ஜடேஸ்வரர் திருக் கல்யாணம், திருத்தணி முருகன் கோயில் தேர் திருவிழா.
சித்திரை 6 - (ஏப்.18)
திரயோசதி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக் கல்யாணம், மகாவீரர் ஜெயந்தி, சமயபுரம் மாரியம்மன் தெப்பம்.
சித்திரை 7 - (ஏப்.19):
சதுர்த்தசி, கள்ளழகர் மதுரை தல்லாக்குளத்தில் எதிர் சேவை. மதுரை, திருச்சி, திருக்கடையூர், சீர்காழி திருப்பணந்தாள், சங்கரன்கோயிலில் தேர் திருவிழா.
சித்திரை 8 - (ஏப்.20)
பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, சித்ரகுப்த பூஜை, தேவேந்திர பூஜை, விழுப்புரம் அரவாணிகள் திருவிழா, மதுரை வைகையில் கள்ளழகர் எழுந்தருளல்.
சித்திரை 9- ( ஏப்.21)
பிரதமதிதி, வீரபாண்டியன் கவுமாரியம்மன் பவனி, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள், நினைவுநாள், திருவள்ளூர் வீரராகவ பவனி.
சித்திரை 10- (ஏப்.22)
துவிதியை, கள்ளழகர் காலை மோகனாவதாரம், பெரிய நகசு, உலக புவி தினம்.
|