முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு!
ம‌த்‌திய அர‌சி‌ன் 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ம‌த்‌திய அர‌சி‌ன் 2008-09ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நே‌ற்று (29.2.2008) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.28,674 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோடியும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும் இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் வழங்கப்படும். தரமான பயிற்சி வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.

2008-09ம் ஆண்டில் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிப்பள்ளிகள் துவக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும்
சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு!
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு!
தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.644 கோடி!
முன்னோடித் திட்டங்களுக்கு ரூ.31 ஆயிரம் கோடி!
பட்ஜெட்- என்.ஆர்.ஐ ஏமாற்றம்
வீட்டு வசதி திட்ட மானியம் அதிகரிப்பு!