முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு!
சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு 2008-09-க்கான பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு ரூ.500 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாக உயர்த்தப்படும் என்று அறி‌வித்தார்.

மேலு‌ம் கீழ்காணும் திட்டங்களை அடுத்த நிதியாண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது:

1) ரூ.3,780 கோடி செலவில் சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் 90 மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கு பல்துறை மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும். இதற்காக அடுத்த நிதியாண்டில் ரூ.540 கோடி செலவழிக்கப்படும்.

2) அடுத்த ஆண்டில், மெட்ரிகுலேஷனுக்கு முன்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.80 கோடி ஒதுக்கீடு

3) மதரஸா கல்வியை நவீனப்படுத்த ரூ.2008-09-ம் ஆண்டிற்கு ரூ.45.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

4) சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழும் மாவட்டங்களில் பொதுத் துறை வங்கிகள் 256 கிளைகளை கடந்த டிசம்பர் துவக்கியுள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 288 கிளைகள் திறக்கப்படும். அடுத்த ஆண்டிலும் மேலும் பல கிளைகள் தொடங்கப்பட இருக்கின்றன.

5) மத்திய துணை ராணுவப் படைகளில் சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்தவர்கள் அதிகமான அளவில் நியமிக்கப்படுவார்கள்.
மேலும்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு!
தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.644 கோடி!
முன்னோடித் திட்டங்களுக்கு ரூ.31 ஆயிரம் கோடி!
பட்ஜெட்- என்.ஆர்.ஐ ஏமாற்றம்
வீட்டு வசதி திட்ட மானியம் அதிகரிப்பு!
ம‌க்களு‌க்கு ம‌கி‌ழ்‌ச்‌சி தரு‌ம் ப‌ட்ஜெ‌ட்: ராமதா‌ஸ்!